மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வர ஈரான் அனுமதி

மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வர ஈரான் அனுமதி
Updated on
1 min read

டெஹ்ரான்: மேலும் 2 எல்​பிஜி டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தியை ஈரான் மூடியது. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் 5-ல் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகத்​தான் நடை​பெறுகிறது. இதை ஈரான் மூடிய​தால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடுமை​யாக உயர்ந்​தது. ஹார்முஸ் ஜலசந்​தியை திறந்து வட வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால் இந்​தி​யா, ரஷ்​யா, சீனா, பாகிஸ்​தான், இராக் ஆகிய 5 நட்பு நாடு​களின் கப்​பல்​களுக்கு மட்​டுமே அனு​மதி வழங்​கப்​படும் என ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி நேற்று முன்​தினம் அறி​வித்​தார்.

ஈரான் போர் தொடங்​கிய​தில் இருந்​து, இது​வரை 4 எரிபொருள் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா வந்​துள்​ளன. இந்​நிலை​யில் மேலும் 2 எல்​பிஜி டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க ஈரான் அனு​ம​தித்​துள்​ளது. இந்த கப்​பல்​களில் 90,000 டன்​களுக்கு அதி​க​மாக சமையல் காஸ் கொண்​டு​வரப்​படு​கிறது. இந்த 2 கப்​பல்​களும் வளை​கு​டாவை கடந்து இந்​தியா வந்து கொண்​டிருக்​கின்​றன. மேலும் 5 எரிபொருள் கப்ப்​ல​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க ஐக்​கிய அரபு அமீரகம் அருகே காத்​துக்​ கிடக்​கின்​றன.

மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வர ஈரான் அனுமதி
ட்ரம்ப் - மோடி பேச்சில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in