இந்தியா

சபர்மதி ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகளை தேடும் மக்கள்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஓடும் சபர்​மதி ஆற்​றங்​கரை​யில் சுற்​றுலா பயணி​கள் பொழுது​போக்​குக்​காக கூடு​வர். இங்கு மக்​கள் ஆற்​றில் இறங்கி குளிப்​பது வழக்​கம். சில பயணி​கள் வேண்​டு​தலுக்​காக ஆற்​றில் காசு​கள், தங்​கம், வெள்ளி நகைகளை போடு​வதும் வழக்​கம்.

சிலர் குளிக்​கும்​போது தங்க, வெள்ளி ஆபரணங்​களை இழப்​பதும் உண்​டு. சபர்​மதி ஆற்​றில் உள்ள வஸ்னா தடுப்​பணை​யின் கதவு​களில் பராமரிப்பு பணி மேற்​கொள்​வதற்​காக தடுப்​பணை மூடப்​பட்​டது. இதனால் சபர்​மதி ஆற்​றில் தண்​ணீர் வரத்து குறைந்து வறண்டு காணப்​படு​கிறது.

இதனால் சிறு​வர்​கள் முதல் முதி​ய​வர்​கள் வரை சபர்​மதி ஆற்​றங்​கரை​யில் குவிந்து ‘புதையலை’ தேடும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். ஒரு​வருக்கு வெள்ளி நாண​யம் கிடைத்​த​தாக கூறப்​படு​கிறது. பெரும்​பாலும், துருப்​பிடித்த இரும்பு பொருட்​கள், வீட்டு உபயோகப் பொருட்​கள்​தான் அங்கு கிடைக்​கின்​றன. ஆனாலும் பலர் கடும் வெயிலை பொருட்​படுத்​தாமல் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT