இந்தியா

“மக்கள் எனது வேண்டுகோளை ஏற்றதால் தங்கம் விலை குறைந்தது” - பிரதமர் மோடி

வெற்றி மயிலோன்

லக்னோ: “இந்தியர்கள் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் விடுத்த வேண்டுகோள், மக்களின் பணத்தைச் சேமிக்க உதவியது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று நான் ஓராண்டுக்கு முன்பு கேட்டுக்கொண்டேன்.

என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தங்கம் வாங்குவதைக் குறைக்கச் சொன்னேன்; நாட்டு மக்களும் அதைக் குறைத்தனர், அதன் விளைவாகத் தங்கத்தின் விலை குறைந்தது. இன்று மக்கள் என்னிடம், 'மோடி ஜி, நீங்கள் சொன்னீர்கள், நாங்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டோம், அதன் மூலம் எங்கள் பணம் சேமிக்கப்பட்டது' என்று கூறுகிறார்கள்.

உணவுப் பற்றாக்குறை இருந்த காலத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நாட்டு மக்களிடம் ஒரு வேளை உணவைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டபோது, ​​இந்த நாடு அதற்குச் செவிசாய்த்தது. அதே கூட்டுப் பங்கேற்பு உணர்வு இன்றும் நம் நாட்டினரிடம் உள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

2023-ல் நாடாளுமன்றத்தில், 'இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள், நீங்கள் செழிப்பு அடைவீர்கள் என்று சொன்னேன். அப்போது சிலர் என்னை ஏளனம் செய்தனர்; ஆனால், முதலீடு செய்தவர்கள் இன்று செழிப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கு வரலாறே சாட்சியாக உள்ளது” என்று கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT