இடது: ராகுல் காந்தி | வலது: சொங்தாம் விக்ரம் சிங்

 
இந்தியா

மணிப்பூர் இசைக் கலைஞர் அடித்துக் கொலை: டெல்லியில் வடகிழக்கு மாநிலத்தவருக்கு பாதுகாப்பில்லை என ராகுல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் சொங்தாம் விக்ரம் சிங் கும்​பல் ஒன்​றால் அடித்துக் கொல்​லப்​பட்​டதை சுட்​டிக்​காட்டி தலைநகர் டெல்லி​யில் வசிக்​கும் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களின் குடும்பங்களுக்கு பாது​காப்பு இல்​லாத நிலை உள்​ள​தாக மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்​கத்​தில் தெரி​வித்​துள்​ள​தாவது: டெல்லி ஆசிரமம் பகு​தி​யில் உள்ள கிலோக்ரி கிராமத்​தில் வசித்து வந்த 54 வயதான மணிப்​பூர் இசை ஆசிரிய​ரான சொங்​தாம் விக்ரம் சிங், தனது வீட்​டிற்கு வெளியே ஏற்​பட்ட சத்​தம் மற்​றும் இடையூறு தொடர்​பாக ஏற்​பட்ட தகராறில் ஒரு கும்​பலால் தாக்கப்பட்டு உயி​ரிழந்​துள்​ளார்.

காவல்​துறை​யின் கூற்​றுப்​படி, விக்​ரம் சிங் தனது வீட்​டிற்கு எதிரே உள்ள உணவக ஊழியர்​கள் மற்​றும் டெலிவரி பாய்​கள் எழுப்​பிய சத்​தத்​திற்கு எதிர்ப்பு தெரி​வித்​ததே இந்த மரணத்​துக்கு காரணம் என்று கூறப்​பட்​டுள்​ளது. சொந்த நாட்​டின் தலைநகரில், தனது வீட்டின் வாசலிலேயே ஒரு​வர் கொல்​லப்​பட்​டுள்​ளார். இது​போன்ற தொடர் சம்​பவங்​களுக்​குப் பிறகு, நாம் இங்கே பாது​காப்​பாக இருக்​கிறோ​மா? என்ற அதே கேள்​வியைத்​தான் டெல்​லி​யில் உள்ள ஒவ்​வொரு வடகிழக்கு மாநிலக் குடும்​ப​மும் இன்று கேட்​கிறது.

வடகிழக்கு மாநில மக்​களுக்கு எதி​ராக அதி​கரித்து வரும் இந்​தச் சட்​ட​விரோதச் செயல்​களைத் தடுக்க உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் டெல்லி காவல்​துறை​யும் ஏதேனும் நடவடிக்​கைகளை எடுத்​துள்​ள​தா? இச்​சம்​பவம் குறித்து விரை​வான விசா​ரணை நடத்தப்​பட்​டு, குற்​ற​வாளி​கள் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்பட வேண்டும். விக்​ரம் சிங்​கின் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு ராகுல் தெரிவித்​துள்​ளார்.

செப்​டம்​பர் 7 அன்று விக்​ரம் சிங் தாக்​கப்​பட்​ட​தாக டெல்​லி​யின் சன்​லைட் காலனி காவல் நிலை​யத்​திற்​குத் தகவல் வந்​துள்​ளது. முதற்​கட்ட விசா​ரணை​யில் சத்​தம் போட்​டதைத் தட்​டிக்​கேட்​டதால் அவர் தாக்​கப்​பட்​டிருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இச்​சம்​பவம் தொடர்​பாகக் கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும், சிறு​வர்​கள் உட்பட குற்​றஞ்​சாட்​டப்​பட்ட அனை​வரும் கைது செய்யப்​பட்​டுள்​ள​தாக​வும் காவல்​துறை அதி​காரி​கள்​ தெரிவித்துள்​ளனர்​.

SCROLL FOR NEXT