உச்ச நீதிமன்றம் 
இந்தியா

தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் விவகாரம்: கர்நாடகாவின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென் பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்டு தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டுமென்று வழங்​கிய தீர்ப்பை மறு​பரிசீலனை செய்​யக்​கோரி கர்​நாடக அரசு தாக்​கல் செய்த மறுஆய்வு மனுவை தள்​ளு​படி செய்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

காவிரி நதிக்கு அடுத்​த​படி​யாக தமிழகத்​தின் இரண்​டாவது பெரிய நதி தென் பெண்​ணை​யாறாகும். இந்த நதி கர்​நாட​கா​வின் நந்தி மலை​யில் உற்​பத்​தி​யாகி தமிழகத்​தின் கிருஷ்ணகிரி, தர்​மபுரி, திரு​வண்​ணா​மலை, வேலூர், விழுப்​புரம் மற்​றும் கடலூர் மாவட்​டங்​கள் வழி​யாக வங்​கக் கடலில் கலக்​கிறது.

இந்த, தென் பெண்​ணை​யாற்​றின் கிளை நதி​யான மார்க்​கண்​டேயா நதி​யின் குறுக்கே “யர்​கோல்” என்ற பகு​தி​யில், கர்​நாடகா அரசு அணை கட்​டு​வதற்​கான நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இவ்​வாறு அந்​தப் பகு​தி​யில் அணை கட்​டப்​பட்​டால் கீழ் பாசன மாநில​மான தமிழகத்​துக்கு நீர் கிடைப்​ப​தில் சிக்​கல் ஏற்​படும்.

இது ஆற்று நீரை நம்பி இருக்​கும் மக்​களுக்​கும், விவ​சா​யிகளுக்​கும் கடும் பாதிப்பை ஏற்​படுத்​தும் என்​பதை சுட்​டிக்​காட்​டி​யும், கர்​நாடக அரசு விதி​களை மீறி செயல்​படு​வ​தாக​வும், எனவே அணை கட்​டு​வதை தடுக்க உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும் என்று கூறி உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், தமிழகம் மற்​றும் கர்​நாடகா இடையே​யான தென் பெண்​ணை​யாறு நீர் பிரச்​சனைக்கு தீர்வு காண பேச்​சு​வார்த்தை குழுவை அமைக்​கு​மாறு கடந்த 2024 ஜனவரி மாதம் மத்​திய அரசுக்கு உத்​தர​விட்​டிருந்​தது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வையடுத்​து, மத்​திய நீர்வள ஆணை​யத் தலை​வர் தலை​மை​யில் தமிழ்​நாடு, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, புதுச்​சேரி உள்​ளிட்ட மாநிலம் மற்​றும் யூனியன் பிரதேச பிர​தி​நி​தி​கள் அடங்​கிய 9 பேர் கொண்ட குழு மத்​திய அரசால் அமைக்​கப்​பட்​டது. இக்​குழு​வின் கூட்​டம் கடந்த 2024 அக்​டோபர் மாதம் டெல்​லி​யில் நடை​பெற்ற நிலை​யில் கூட்​டத்​தில் எந்​த​வித உடன்​பாடும் எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் தென் பெண்​ணை​யாறு வழக்கு கடந்த ஆண்டு டிசம்​பர் 19ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தின் நீதிபதி விக்​ரம் நாத் தலை​மையி​லான அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தமிழக அரசு தரப்​பில், ‘நீர் பங்​கீடு குறித்து தீர்வு காண்​ப​தற்​காக குழு அமைக்​கப்​பட்​டு, இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்​தி​யும் அது தோல்​வியடைந்து விட்​டது. எனவே மத்​திய அரசு நடு​வர் மன்​றம் அமைக்க உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும்’ என கோரிக்கை வைக்​கப்​பட்​டது. அந்த கோரிக்​கைக்கு கர்​நாடக அரசு கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தது.

அப்​போது, மத்​திய அரசு தரப்​பில், நீர் பங்​கீடு விவ​காரத்​தில் ஒரு இறுதி முடிவை எட்ட மத்​திய அரசு உதவுவதற்கு தயா​ராக இருந்​தும் இரு மாநில அரசுகளும் அதற்கு ஒத்​துழைப்பு வழங்​க​வில்லை என கூறியது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்​களை​யும் பதிவு செய்து கொண்டு கடந்த பிப்​ர​வரி 2ம் தேதி தீர்ப்பு வழங்​கியது உச்​சநீ​தி​மன்​றம். அதில், மத்​திய அரசு ஒரு மாத காலத்​திற்​குள் தென் பெண்​ணை​யாறு நீர் பிரச்​சினையை தீர்ப்​ப​தற்​கான தீர்ப்​பா​யத்தை அமைத்​து, அதி​காரப்​பூர்​வ​மாக அரசு இதழில் அறி​விப்பை வெளியிட வேண்​டுமென ஆணை​யிட்​டது.

ஆனால் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை அமல்​படுத்த கூடு​தலாக கால அவகாசம் வழங்க வேண்​டும் என்று கோரி மத்​திய அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு மனுவை தாக்​கல் செய்​தது. அந்த மனு கடந்த மே மாதம் விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட்டு தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்டு தீர்ப்​பா​யம் அமைக்க 6 மாத காலம் மத்​திய அரசுக்கு கூடு​தல் அவகாசம் வழங்கி உச்​சநீ​தி​மன்​றம் ஆணை​யிட்​டது.

இந்​நிலை​யில், நீர் பங்​கீட்டு தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டுமென்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்​யக்​கோரி கர்​நாடகா அரசு உச்​சநீ​தி​மன்​றத்​தில் மறுஆய்வு மனுவை தாக்​கல் செய்​தது. இந்த மறுஆய்வு மனு ஜூலை 14ம் தேதி​யன்று உச்ச நீதி​மன்​றத்​தின் நீதிப​தி​கள் விக்​ரம் நாத் மற்​றும் என்​.​வி.அஞ்​சா​ரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு சேம்​பரில் விசா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​பட்டு பரிசீலிக்​கப்​பட்​டது. இதனையடுத்து உத்​தரவு பிறப்​பித்த நீதிப​தி​கள், தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்டு தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்​வதற்கு எந்த ஒரு மு​காந்​திர​மும் காண இயல​வில்லை என தெரி​வித்து கர்​நாடக அரசு தாக்​கல்​ செய்​த மறு ஆய்​வு மனுவை தள்​ளு​படி செய்​து உத்​தரவிட்​டனர்​.

SCROLL FOR NEXT