அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு, கடந்த மாதம் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஒரே வாரத்தில், கையில் கட்டுடன் தனது அரசு அலுவலகப் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான வேலைப் பளு காரணமாக, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மீண்டும் வலி தீவிரமடைந்தது.
இதையடுத்து, அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், வலி நிவாரணம் மற்றும் விரைவான குணமடைதலுக்கு மரபுசார் ஆயுர்வேத தெரபி சிகிச்சையை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினர். மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று, கேரளாவில் தங்கி ஆயுர்வேத தெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அவர் நேற்று அம்மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.