பவன் கல்யாண் 
இந்தியா

“இந்து மரபுகள், சடங்குகளை கேலி செய்வது வழக்கமாகிவிட்டது” - பவன் கல்யாண் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: இந்து மரபு​கள், சடங்​கு​களை கேலி செய்​வது வழக்​க​மாகி​விட்​டது என திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாண் கருத்து தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இன்​றைக்கு நம் நாட்​டில் உள்ள இந்​துக்​கள் தங்​கள் நம்​பிக்​கையை பின்​பற்​ற​வும், தங்​கள் சடங்​கு​களை செய்​ய​வும் நீதி​மன்​றத்​தின் தலை​யீட்டை நாட வேண்​டியது வருத்​த​மாக​வும், முரண்​பா​டாக​வும் இருக்​கிறது. முரு​க​னின் அறு​படை வீடு​களில் ஒன்​றான திருப்​பரங்​குன்​றத்​தில் கார்த்​திகை தீபத்​தையொட்டி மலை​யின் மேல் தீபம் ஏற்ற, ஒரு தீர்க்​க​மான சட்டப்போராட்​டத்​தில் வெற்றி பெற்ற பிறகும், பக்​தர்​கள் ஒரு எளிய அமை​தி​யான சடங்​கைச் செய்ய முடி​யா​விட்​டால், சொந்த நாட்​டில் அரசி​யலமைப்பு நீதியை எங்கு பெறு​வார்​கள்.

இந்து மரபு​கள் மற்​றும் சடங்​கு​களை கேலி செய்​வது சில குழுக்​களுக்கு வழக்​க​மாகி​விட்​டது. எந்த மத விழாவை​யும் ஒரு வாரம் தாமத​மாக கொண்டாட முடி​யு​மா, ஆனால் புனித​மான கார்த்​திகை தீபம் திருடப்​பட்டு மறைந்​து​விட்​டது. ஏனென்​றால் இந்​துக்​கள் சாதா​ரண​மாக எடுத்​துக் கொள்​வார்​கள். ஒவ்​வொரு முறை​யும் ஏற்​படும் இழப்பை ஏற்​றுக்​கொண்டு சமரசம் செய்​வது இந்​துக்​கள் தான்.

அதே மற்ற மத நிகழ்​வு​களுக்​கும் இதையே செய்​யத் துணி​கிறார்​களா, இந்​துக்​கள் சாதி, பிராந்​திய மற்​றும் மொழி​யியல் தடைகளால் பிரிக்​கப்​பட்​டிருக்​கும் வரை இந்து மதம், அதன் நடை​முறை​களுக்கு எதி​ரான கேலி, அவமானங்​கள் மற்​றும் துஷ்பிரயோகங்​கள் தொடரும். தாங்கள் எதிர்​கொள்​ளும் அவமானத்​தைப் பார்த்து இந்​துக்​கள் ஒருநாள் விழித்​தெழுவார்கள் என நம்​பு​கிறேன்​. இவ்​வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT