ஆனந்த் தீக்​சித்

 
இந்தியா

ரூ.4 கோடியை தாண்டிய மருத்துவ கட்டணம் - கோமாவில் இருந்து மகனை மீட்க 27 மாதமாக போராடும் பெற்றோர்!

கைவிரித்த காப்​பீட்டு நிறு​வனம்

செய்திப்பிரிவு

மும்பை: வாழ்க்​கைக்​கும் மரணத்​துக்​கும் இடையி​லான நூலிழையில் ஊசலாடும் கோமா நோயாளி​களின் நிலை குறித்து ஹரிஷ் ரானா வழக்கு நாடு தழு​விய அதிர்​வலைகளை ஏற்படுத்தியது.

தற்​போது அதே போன்​றதொரு உருக்​க​மான சூழலில், மும்பையைச் சேர்ந்த ஆனந்த் தீக்​சித் (35) என்ற இளைஞர், கடந்த இரண்​டரை ஆண்​டு​களுக்​கும் மேலாக ‘கோ​மா’ எனப்​படும் சுயநினை​வற்ற நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். கடந்த 2013ல் மாடி​யில் இருந்து விழுந்து மூளை பாதிப்​படைந்​து, நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு உச்ச நீதி​மன்ற அனு​ம​தி​யுடன் கருணைக் கொலை செய்​யப்​பட்ட ஹரிஷ் ரானா​வின் நிழலாக தற்​போது ஆனந்​தின் வாழ்க்​கை​யும் மாறி​யுள்​ளது.

          

உயிருள்ள சடல​மாக முடங்​கிக் கிடக்​கும் ஆனந்​தின் துயரம் 2023ம் ஆண்டு டிசம்​பர் 29ம் தேதி தொடங்​கியது. கோரக்​பூரில் தான் புதிதாக வாங்​கிய ஸ்கூட்​டரில் சென்ற போது ஏற்​பட்ட விபத்​து, அவரது வாழ்க்​கையை புரட்​டிப் போட்​டது. அன்று முதல் உயிர்காக்கும் உபகரணங்​களின் உதவி​யுட​னும், குழாய் வழியாகச் செலுத்​தப்​படும் உணவுட​னும் அவர் காலம் தள்ளி வருகிறார்.

கடந்த 27 மாதங்​களாக ஆனந்​தின் ஒரு சிறு அசைவுக்​காக அவரது பெற்​றோர், உறவினர்​கள் காத்​திருக்​கின்​றனர். ஆனால், அதற்கு மவுனம் மட்​டுமே விடை​யாக எஞ்சி நிற்​கிறது. மகனின் இதயத் துடிப்​பைத் தக்​கவைக்க தீக்​சித் குடும்​பம் தங்​களது ஒட்​டுமொத்த சேமிப்​பை​யும், நிலத்​தை​யும் விற்​று​விட்டு தற்​போது நடுத்​தெருவுக்கு வந்​து​விட்​டது. இது​வரை மருத்​து​வக் கட்​ட​ண​மாக மட்டும் ரூ. 4 கோடியை அவர்​கள் செல​விட்​டுள்​ளனர்.

இந்​தத் துயரத்​துக்கு மத்​தி​யிலும், மும்பை மாநக​ராட்சி அவர்​கள் குடி​யிருந்த வீட்டை இடித்​துத் தரைமட்​ட​மாக்​கி​யுள்​ளது. கட்டிடத்தின் சட்​டப்​பூர்வ சிக்​கல்​கள் காரண​மாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்​கை​யால், ஐசி​யூ-​வில் மகனுக்காகப் போராடிக் கொண்​டிருந்த பெற்​றோர் தற்​போது வாடகை வீட்​டுக்கு இடம்​பெயர்ந்​துள்​ளனர்.

காப்​பீடு மற்​றும் மருத்​து​வச் சட்​டங்​களில் மாற்​றம் ஏற்​ப​டாத வரை இதுபோன்ற கோமா நோயாளி​களின் நிலை அந்த முழுக் குடும்பத்​துக்​கு​மான மரண தண்​டனை என்​ப​தற்கு ஆனந்​தின் நிலை​யே தற்​போது சாட்​சி​யாக மாறி நிற்​கிறது.

கைவிரித்த காப்​பீட்டு நிறு​வனம்

இது குறித்து ஆனந்​தின் தந்தை கண்​ணீருடன் கூறிய​தாவது: என் மகன் மீண்​டும் ஒருமுறை ‘அப்​பா’ என்று கூப்​பிட மாட்​டானா என்ற ஏக்​கத்​தில் என்னிடம் இருந்த அனைத்​தை​யும் விற்​று​விட்​டேன். மருத்துவமனை கட்​ட​ணங்​கள் ஒரு​புறம் எங்​களைச் சூறை​யாட, மறு​புறம் ‘கேர் ஹெல்த் இன்​சூரன்​ஸ்’ நிறு​வனம் எங்​களது கோரிக்கையை நிராகரித்து எங்​களைக் கடனாளி​யாக்கி விட்​டது. நாங்​கள் ஐசி​யூ-​வில் மகனின் உயிருக்​காகப் போராடிய போது, மாநக​ராட்சி கொஞ்​ச​மும் மனசாட்சி இன்றி எங்​களது வீட்​டை​யும் இடித்​து​விட்​டது.

நாங்​கள் இப்​போது நடுத்​ தெரு​வில் நிற்​கிறோம். மகன் என்​றாவது ஒரு​ நாள் கண் விழிப்​பான் என்ற நம்​பிக்​கை​யில், அவனது கைக்கடி​காரத்​தை​யும் அலைபேசி​யை​யும் இன்​னும் அவரது தாயார் கையில் பத்​திர​மாக வைத்​துள்​ளார். அவர்​கள் எங்​களது வீட்​டை​யும், பணத்​தை​யும் பறித்​திருக்​கலாம். ஆனால், என் மகன் மீண்​டும் வரு​வான் என்ற எங்​களது நம்​பிக்​கையை மட்​டும் யாராலும் பறிக்க முடி​யாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT