இந்தியா

​திருமலையில் உள்ள கர்நாடக சத்திரத்தை சுற்றுலாத் துறை ஏற்று நடத்த எதிர்ப்பு

என்.மகேஷ் குமார்

திருமலை: மைசூரு மகா​ராஜா​வின் பரம்​பரை​யினர் ஏழுமலையானுக்கு செய்த சேவை​கள், கைங்​கர்​யங்​கள், காணிக்கைகளுக்கு மதிப்​பளித்து, கர்​நாடக பக்​தர்​கள் தங்குவதற்கு திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் 7.5 ஏக்​கர் நிலம் வழங்​கியது. அங்கு கர்நாடக அரசு சத்திரம் கட்​டியது. அருங்காட்சி​யகத்​துக்கு எதிரே உள்ள இங்​கு, ஏராள​மான பக்தர்கள் முன்​ப​திவு செய்து குடும்​பத்​துடன் தங்​கிச் செல்கின்றனர்.

இந்​நிலை​யில், கர்​நாடக முதல்​வர் டி.கே. சிவக்​கு​மார் தலைமையிலான அமைச்​சரவை கூட்​டத்​தில் இச்சத்​திரத்தை சுற்றுலாத்துறை​யிடம் ஒப்​படைக்க தீர்​மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு உறுப்​பினர் பானுபிர​காஷ் ரெட்​டி, தெலுங்கு தேசம் உள்​ளிட்ட கட்​சிகளும், பல இந்து அமைப்​பு​களும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

இதுகுறிற்து பானுபிர​காஷ் ரெட்டி ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: திரு​மலை​யின் ஒவ்​வொரு அடி​யும் ஏழு​மலை​யானுக்கே சொந்​தம். வேறு யாரும் உரிமை கொண்​டாட முடி​யாது. மைசூரு மகா​ராஜாவுக்கு மரி​யாதை செலுத்​தும் வகையிலேயே நிலம் ஒதுக்​கப்​பட்​டது. ஆனால், கர்​நாடக அரசு அதைச் சுற்​றுலாத்துறைக்கு ஒதுக்​கி, தனி​யாருக்கு வழங்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் பின்​னணி​யில் ஒரு முன்​னாள் காங்​கிரஸ் எம்​.பி. இருக்​கிறார்.

கடைகள், ஓட்​டல்​கள் நடத்தி பல கோடி சம்​பா​திக்க நினைக்கின்றனர். இது ஒரு​போதும் நடக்​காது. ஒரு அங்​குலத்​தைக்​கூடத் தனி​யாருக்கு விட்​டுக்​கொடுக்க மாட்​டோம். கர்​நாடக அரசு இத்​திட்​டத்​தைக் கைவிட வேண்​டும். இல்​லை​யேல், நிலத்தை தேவஸ்​தானம் திரும்​பப் பெறும். தேவஸ்​தான சட்​டம் 30/1987-ன்​படி, இந்த சொத்​துகள் ஏழு​மலை​யானுக்கு மட்​டுமே உரிய​வை.

இவற்​றின் மீது கர்​நாடக அரசுக்கு அதி​காரம் இல்​லை. திரு​மலை வரும் கர்​நாடக அமைச்​சர்​கள், எம்​.பி, எம்​.எல்​.ஏ.க்​களுக்கு நித்ய ஹாரத்தி கொடுக்க வேண்​டும் என சிவக்​கு​மார் பேசி​யதை​யும் யாரும் ஏற்​க​வில்​லை. அறங்​காவலர் குழு, அதி​காரி​களு​டன் ஆலோ​சித்து அவருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​படும். புனிதத் திருத்தலத்தை வி​யா​பார மைய​மாக​வும் அரசி​யல் களமாக​வும் மாற்ற முயல்​வது நல்​லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT