நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது தங்கை பிரியங்கா காந்தி. அருகில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்.

 
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவைகளும் 6 முறை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்தொடர் நேற்று தொடங்​கியது. முதல் நாளில் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு அவை​களும் 6 முறை ஒத்​திவைக்​கப்​பட்​டன.

மக்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், மறைந்த 7 முன்​னாள் எம்.​பி.க்​களுக்கு இரங்​கல் தெரிவிக்​கப்​பட்​டது. பின்​னர், உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களின் எண்​ணிக்​கையை 38 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முறை​கேடு, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சியின் போராட்​டம், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்​ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன.

‘‘அனை​வரும் இருக்​கை​யில் அமரவேண்​டும்’’ என்று மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லா வலி​யுறுத்தினார். ஆனால், அவரது அறி​வுரையை ஏற்க மறுத்து எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதனால் மதி​யம் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மக்​களவை மீண்​டும் கூடிய​போது அதே கோரிக்​கைகளை வலி​யுறுத்தி எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் கோஷம் எழுப்​பினர். இதனால் அடுத்​தடுத்து அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்​போது, மறைந்த மாநிலங்​களவை உறுப்​பினர் ​களுக்கு அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது.

மேற்​கு ​வங்​கம், ராஜஸ்​தான், கர்நாட​கா, மத்​திய பிரதேசம், குஜ​ராத், மிசோரம் உள்​ளிட்ட மாநிலங்​களில் இருந்து புதி​தாக தேர்வு செய்​யப்​பட்ட எம்.​பி.க்​கள் பதவி​யேற்​றுக்கொண்​டனர்.

அவர்​களுக்கு மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிர​மாண​ம் செய்து வைத்​தார். இதன்​பிறகு, நீட் தேர்வு முறை​கேடு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்​ளிட்ட விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்சி எம்.​பி.க்​கள் கோஷமிட்​டனர். இதனால் அவை மதி​யம் 12 மணி வரையும், பின்னர் 12.30 மணி வரையும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

பின்​னர் அவை கூடிய​போது காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் போராட்டம் குறித்​துப் பேசி​னார். அவர் கூறும்​போது, “நி​யாய​மான கோரிக்​கைகளை வலி​யுறுத்தி இளைஞர்​கள் பேரணி நடத்தி உள்​ளனர். அவர்​கள் மீது போலீ​ஸார் தடியடி நடத்​தி​யதை வன்​மை​யாக கண்​டிக்​கிறோம்’’என்று குற்​றம் சாட்​டி​னார்.

எதிர்க்​கட்சி எம்.​பி.க்​கள் கோஷம்: எழுப்பி அமளி​யில் ஈடு​பட்டதால், அடுத்​தடுத்து பலமுறை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை நேற்று 6 முறை ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிற்​பகல் 3 மணிக்கு இரு அவை​களும் நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டன.

தொகுதி மறு​வரையறை மசோதா: மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​துதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோ​தாக்​கள் கடந்த நாடாளு​மன்ற கூட்​டத் தொடரில் மக்​களவை​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​களை நிறைவேற்ற மூன்​றில் 2 பங்கு எம்.​பி.க்​களின் ஆதரவு தேவை. போதிய ஆதரவு இல்​லாமல் மசோ​தாக்​களை நிறைவேற்ற முடிய​வில்​லை. தற்​போதைய மழைக்​கால கூட்​டத்தொடரில் இந்த மசோ​தாக்​களை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டுகிறது.

திமுக ஆதரவு: பாஜக நம்பிக்கை

இதுதொடர்​பாக நாடாளுமன்ற வளாகத்​தில் பாஜக எம்.பி. அசோக் சவான் நேற்று கூறும்​போது, “தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நிறைவேற்ற தேவை​யான எம்.​பி.க்​களின் பலம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு உள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​களில் பலர் எங்​கள் அணிக்கு வந்​துள்​ளனர். சில தி​முக எம்.​பி.க்​களும் எங்களுக்கு ஆதரவு தரக்​கூடும். தொகுதி மறு​வரையறை மசோதா நிறைவேறும். நா​டாளு​மன்ற கூட்​டத்​தொடரில்​ அனைத்​து கேள்வி​களுக்​கும்​ தெளி​வான பதில்​ கிடைக்​கும்” என்​று தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT