கோப்புப்படம்
புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ் ணன், “இந்த விவகாரம் குறித்து அரசு விவாதிக்க தயாராக இருப்பதால் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் வரிசையை நோக்கிச் சென்று அரசுக்கு முழக்கங்களை எழுப்பியபடி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.