கல்பெட்டா: இம்மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் முகாமிட்டிருக்கும் அந்த தொகுதி எம்பி பிரியங்கா காந்தியிடம் சிறப்பு கூட்டத் தொடர் குறித்து நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறது. நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். நாட்டின் முக்கிய அமைப்புகளை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. இதைதடுக்க தீவிரமாகப் போராடி வருகிறோம். இவ்வாறு பிரியங்கா தெரிவித்துள்ளார்.