இந்தியா

குஜராத் மக்கள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் கார்கே

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே அண்​மை​யில் கேரளா​வில் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​தார்.

இடுக்கி நகரில் அவர் பேசுகை​யில், "கேரள மக்​களைத் தவறாக வழிநடத்​தாதீர்​கள், அவர்​கள் மிக​வும் புத்​தி​சாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி, பின​ராயி விஜயன் இரு​வரும் குஜராத்​தி​லும் மற்ற இடங்​களி​லும் கல்​வியறி​வில்​லாத மக்​களை ஏமாற்​றலாம். ஆனால் கேரள மக்​களை ஏமாற்ற முடி​யாது" என்றார்.

          

குஜ​ராத் மக்​கள் குறித்த கார்​கே​வின் இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் மல்​லி​கார்​ஜுன கார்கே நேற்று 'எக்​ஸ்' தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “சமீபத்தில் கேரளா​வில் எனது தேர்​தல் உரை​யில் கூறப்​பட்ட சில கருத்​துக்​கள் வேண்​டுமென்றே தவறாக திரிக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும், எனது மனமார்ந்த வருத்​தத்தை தெரி​வித்​துக் கொள்கிறேன். குஜ​ராத் மக்​களின் உணர்​வு​களைப் புண்​படுத்​தும் நோக்​கம் எனக்கு ஒரு​போதும் இருந்​த​தில்​லை” என்​று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT