இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை

பாகிஸ்தான் அத்து மீறினால் தக்க பதிலடி தரப்படும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​கிறது என்​றும் பாகிஸ்​தான் அத்துமீறி​னால் தக்க பதிலடி கொடுக்​கப்​படும் என்​றும் ராணுவ தளபதி உபேந்​திர திவேதி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

வரும் 15-ம் தேதி ராணுவ தினம் கொண்​டாடப்பட உள்​ளது. இதையொட்​டி, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவேதி டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி தரும் வகை​யில், கடந்த ஆண்டு மே மாதம் ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, எல்​லைக்கு அருகே பாகிஸ்​தானில் செயல்​பட்டு வந்த 9 தீவிர​வாத முகாம்​கள் மீது நமது முப்​படைகளும் இணைந்து துல்​லிய​மாக தாக்​குதல் நடத்​தின.

இதற்கு பதிலடி தர முயன்ற பாகிஸ்​தான் ராணுவத்​தின் கட்​டமைப்​பு​கள் மற்​றும் விமானப்​படை தளங்​களை குறி​வைத்​தும் தாக்​குதல் நடத்​தினோம். அதில் அவர்​களுக்கு மிகப்​பெரிய சேதம் ஏற்​பட்​டது. 100-க்கும் மேற்​பட்ட அந்​நாட்டு வீரர்​கள் உயி​ரிழந்​தனர்.

ஆபரேஷன் சிந்​தூர் மிகத் துல்​லிய​மாகத் திட்​ட​மிடப்​பட்டு செயல்​படுத்​தப்​பட்​டது. எதிரி​யின் எல்​லைக்​குள் நுழைந்து தாக்​கியதுடன், தீவிர​வாதக் கட்​டமைப்​பு​களை அழித்​து, பாகிஸ்​தானின் நீண்​ட​கால அணுஆ​யுத மிரட்​டல் போக்​கை​யும் தகர்த்​தோம்.

இந்த சூழ்​நிலை​யில், பாகிஸ்​தானை ஒட்​டிய எல்லை கட்​டுப்​பாட்​டுக் கோடு அருகே இன்​ன​மும் 6 தீவிர​வாத முகாம்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இது​போல சர்​வ​தேச எல்​லைக்கு அப்​பால் 2 முகாம்​கள் செயல்​படு​கின்​றன.

ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிவுக்கு வரவில்​லை, தொடர்​கிறது. வருங்​காலத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக பாகிஸ்​தான் அத்​து​மீற முயற்சி செய்​தால் தக்க பதிலடி தரப்​படும். தரைவழியாக நடத்தப்படும் தாக்குதலை முறியடிக்கவும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT