இந்தியா

‘சனாதனத்தைப் பின்பற்றுவோரே துர்கா சிலைகளை தொட வேண்டும்’ - சுவேந்து அதி​காரி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஹூக்ளி ஆற்​றில் துர்கா சிலைகளைக் கரைக்​கும்​போது, சனாதன தர்​மத்​தைப் பின்​பற்​று​பவர்​கள் மட்​டுமே சிலைகளைத் தொட அனுமதிக்​கப்​படுவார்​கள் என்று மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்​கத்​தாவின் பாபு​காட்​டில் துர்கா தேவி சிலைக் கரைப்பு ஏற்​பாடுகளை முதல்​வர் சுவேந்து அதி​காரி நேற்று ஆய்வு செய்​தார். பின்​னர், அவர் கூறிய​தாவது: ஹூக்ளி ஆற்​றில் துர்கா சிலைகளைக் கரைக்​கும்​போது, சனாதன தர்​மத்​தைப் பின்​பற்​று​பவர்​கள் மட்​டுமே சிலைகளைத் தொட அனுமதிக்​கப்​படுவார்​கள். மத மரபு​களை அனைவரும் பின்​பற்ற வேண்​டும்.

ஹூக்ளி ஆற்​றுக்​குள் சிலைகளைக் கொண்டு செல்​லும் பணி​யில் ஈடு​படு​பவர்​களின் அடை​யாளங்​களை சரிபார்க்க வேண்​டும் என்று காவல் ஆணை​யருக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். சிலைக் கரைப்பு நிகழ்ச்​சி​யின் புனிதத் தன்​மையைப் பாது​காக்க, ஆயிரக்​கணக்​கான ஆண்​டுகளாகப் பின்​பற்​றப்​பட்டு வரும் மரபு​கள், வேதங்​கள் மற்​றும் விதி​முறைகளைப் பின்​பற்ற வேண்​டும்.

இது ஒரு திரு​விழா என்​றாலும், முதன்​மையாக இது ஒரு மத நிகழ்ச்சி​யாகும். இவ்​வாறு அவர் கூறினார். மகாசப்​தமி தினமான கடந்த 17-ம் தேதி மாலை, கொல்​கத்​தாவின் சோர்​பாகன் துர்கா பூஜை பந்​தலில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சிலைக் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான பாது​காப்பு ஏற்​பாடுகளை அரசு நிர்​வாகம் அதி​கரித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT