இந்தியா

கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளா​வின் கோழிக்​கோட்டை சேர்ந்த ஒரு​வருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.

கடந்த 2018-ம் ஆண்​டில் கேரளா​வின் கோழிக்​கோடு, மலப்​புரம் பகு​தி​களில் நிபா வைரஸ் பரவுவது முதல் முதலாக கண்​டறியப்​பட்​டது. இந்த சூழலில் தற்​போது கோழிக்​கோட்டை சேர்ந்த 43 வயது நபருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்​யப்​பட்டு உள்ளது.

கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி​யில் வென்​டிலேட்​டர் உதவி​யுடன் அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவரது குடும்​பத்​தினரும், அவரோடு தொடர்​புடைய​வர்​களும் தனிமைப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் முரளிதரன் கூறும்போது, "நிபா வைரஸ் தொற்​றால் பாதிக்​கப்​பட்ட நபர் முதலில் கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் வெளிநோ​யாளி​யாக சிகிச்சை பெற்​றுள்​ளார். அதே மருத்​து​வ​மனை​யில் அவருக்கு எம்​ஆர்ஐ ஸ்கேன் எடுக்​கப்​பட்டு உள்​ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்​து​வர்​கள், ஸ்கேன் எடுத்த சுகா​தார ஊழியர்​களை தனிமைப்​படுத்தி உள்​ளோம்" என்றார்.

நிபா வைரஸ் பரவலை தடுக்க அமைச்​சர் முரளிதரன் தலை​மை​யில் திரு​வனந்​த​புரத்​தில் நேற்று உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

ஷிகெல்லா பாதிப்பு

கேரளா​வில் ஷிகெல்லா பாக்​டீரியா தொற்று பரவி வரு​கிறது. அந்த மாநிலத்​தின் வயநாடு பகு​தி​யில் உள்ள பள்​ளி​யில் ஒரு மாணவருக்கு நேற்று ஷிகெல்லா தொற்று உறுதி செய்​யப்​பட்​டது.

அவரை​யும் சேர்த்து இது​வரை 9 பேர் இந்த பாக்​டீரி​யா​வால் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக வயநாடு பகு​தியைச் சேர்ந்த 514 மாணவ, மாண​வியர் தனிமைப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

SCROLL FOR NEXT