இந்தியா

கடவுள் நம்பிக்கையில் தலையிட முடியாது: சபரிமலை வழக்கில் வாதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த தீர்ப்​புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வருகிறது.

நேற்று நடை​பெற்ற 7-வது நாள் விசா​ரணை​யின்​போது, தீர்ப்பை எதிர்க்​கும் தரப்பை சேர்ந்த மூத்த வழக்​கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, "பக்​தரின் நம்​பிக்கை தனிப்​பட்ட விவகாரம் என்​ப​தால், பக்​தருக்​கும், படைத்​தவருக்​கும் இடையிலான விவ​காரத்​தில் நீதி​மன்​றங்​கள் தலை​யிட முடி​யாது" என வா​திட்​டார்​.

SCROLL FOR NEXT