இந்தியா

மயக்க மருந்து கொடுத்ததால் ஒன்றரை வயது குழந்தை மரணம்

செய்திப்பிரிவு

கண்ணூர்: கேரள மாநிலம் கண்​ணூர் மாவட்டம் மாதமங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த டி.சூரஜ் - விஜிஷா தம்​ப​தி​யரின் 18 மாத குழந்​தை, கடந்த ஜூலை 5-ம் தேதி வீட்​டின் முற்​றத்​தில் விளை​யாடிக் கொண்டு இருந்​தான். அப்​போது தவறி கீழே விழுந்​த​தில் உதட்​டில் காயம் ஏற்​பட்​டது.

பையனூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்​து​வ​மனைக்​குக் குழந்​தையை பெற்​றோர் அழைத்​துச் சென்​றனர். அங்கு அவனது காயத்​துக்கு தையல் போடு​வதற்​காக மருத்​து​வர்​கள் மயக்க மருந்து கொடுத்​துள்​ளனர்.

மயக்க மருந்து செலுத்​தப்​பட்ட சில நிமிடங்​களி​லேயே குழந்​தை​யின் உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​ததுடன், அவன் சுயநினை​வை​யும் இழந்​தான். இதையடுத்​து, மேல் சிகிச்​சைக்​காகக் கண்​ணூரில் உள்ள தங்​களின் மற்​றொரு பிரிவுக்கு மருத்​து​வ​மனை நிர்​வாகம் குழந்​தையை மாற்​றியது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சுமார் 9 மணி​யள​வில் குழந்தை பரி​தாப​மாக உயி​ரிழந்​தான்.

இது தொடர்​பாக, எரமத்​தைச் சேர்ந்த குழந்​தை​யின் உறவினர் கே.​ராஜீவன் அளித்த புகாரின் அடிப்​படை​யில், பையனூர் பேபி மெமோரியல் மருத்​து​வ​மனை​யின் மயக்க மருந்து நிபுணர் மருத்​து​வர் அஞ்​சலி போது​வால் மீது பையனூர் போலீ​ஸார் நேற்று வழக்​குப் ​ப​திவு செய்​து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT