இந்தியா

டெல்லியில் ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: வடக்கு டெல்லியில் உள்ள வசீர்பூர் பகுதியில் டெல்லி போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்டவையாகும்.

இதனை ஏன் கோடிக்கணக்கில் இருப்பில் வைத்திருந்தார்கள் என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT