இந்தியா

தீவிர​வா​தி​களை மடக்​கிய அதி​காரி: மகா​ராஷ்டிரா டிஜிபியானார்

செய்திப்பிரிவு

மும்பை: மும்​பை​யில் கடந்த 2008 நவம்​பர் 26-ம் தேதி​ தீவிர​வா​தி​கள் தாக்குதல் நடத்​தி​ய​போது, மும்பை காவல்​ துறை​யின் கூடுதல் ஆணை​ய​ராக இருந்​தவர் சதானந்த் வசந்த் டேட்.

இவரது தலை​மையி​லான போலீஸ் படை​யினர்​தான் லஷ்கர் தீவிர​வா​தி​கள் அஜ்மல் கசாப் மற்​றும் அபு இஸ்​மா​யில் ஆகியோரை மடக்கி பிடித்​தனர்.

வெடிகுண்​டில் இருந்து வெளி​யேறிய சிறுதுகள் ஒன்று அவரது கண் அருகே அகற்ற முடி​யாத நிலை​யில் இன்​னும் உள்​ளது. இவரது வீரதீர செயலுக்​காக குடியரசுத் தலை​வரின் போலீஸ் பதக்​கம் வழங்​கப்​பட்​டது. சமீபத்​தில் தேசிய புல​னாய்வு முகமை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட சதானந்த் வசந்த் டேட், மகா​ராஷ்டிரா டிஜிபி​யாக நியமிக்கப்பட்​டுள்​ளார். இப்பத​வி​யில் இருந்து வரும் ராஷ்மி சுக்லா நாளை மறு​நாள் ஒய்வு பெறுகிறார்.

SCROLL FOR NEXT