புவனேஸ்வர்: ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் எம்.வி.-26 கிராமத்தில் வசிக்கும் வங்காள மக்களுக்கும் அப்பகுதி பழங்குடியினருக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பழங்குடியினப் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். சுமார் 200 வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ஒடிசா அரசு ரூ.4.65 கோடி அனுமதி அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும். வீடுகள், கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டு விலங்குகள் மற்றும் வாகனங்கள் சேதத்திற்கு ரூ.4.45 கோடி வழங்கப்படும்” என்றார்.