இந்தியா

என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: ‘நேவிக்’ சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன - இஸ்ரோ தலைவர் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: நம்​நாட்​டின் வழிகாட்​டுதல் பயன்​பாட்​டுக்​கான ‘நேவிக்’ சேவை​கள் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ள​தாக இஸ்ரோ தலை​வர் வி.நாராயணன் தெரி​வித்​தார்.

அமெரிக்​கா​வுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்​நாட்​டில் தரை, கடல் மற்​றும் வான்​வழி போக்​கு​வரத்து மற்​றும் பாது​காப்பு பயன்​பாட்​டுக்கு உதவும் இந்​திய மண்​டல வழிகாட்​டுதல் செயற்​கைக்​கோள் அமைப்பு (ஐஆர்​என்​எஸ்எஸ்) உரு​வாக்க இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) முடிவுசெய்​தது. இதற்​காக ரூ.1,420 கோடி​யில் ஐஆர்​என்​எஸ்எஸ் வரிசையில் 7 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டன.

அதில் 3 செயற்​கைக்​கோள்​கள் மட்​டுமே தற்​போது பயன்​பாட்​டில் உள்​ளன. பழுதானவை​களுக்கு மாற்று செயற்​கைக்​கோள்​களை தயாரித்து இஸ்ரோ விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி இஸ்ரோ சார்​பில் வடிவ​மைக்​கப்​பட்ட என்​விஎஸ்-03 (ஐஆர்​என்​எஸ்எஸ் 1 எல்) செயற்​கைக்​கோள் ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்​கெட் மூலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து நேற்று முன்​தினம் இரவு வெற்​றிகர​மாக செலுத்​தப்​பட்​டது.

அதைத் தொடர்ந்து இஸ்ரோ தலை​வர் வி.நாராயணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: என்​விஎஸ்-03 செயற்​கைக்​கோள் திட்​ட​மிடப்​பட்ட சுற்​றுப்​பாதையில் துல்​லிய​மாக நிலைநிறுத்​தப்​பட்​டது. நேவிக் தொழில்​நுட்​பம் மூலம் இருப்​பிடம், வழிகாட்​டுதல் மற்​றும் நேரச் சேவை​களை வழங்க சுற்​றுப்​பாதையில் குறைந்​தது 4 செயற்​கைக்​கோள்​கள் தேவை. எனவே, இந்த ஏவுதலின் மூலம் நமது நேவிக் சேவை​களை முழு​மையாக மீட்​டெடுத்​துள்​ளோம்.

இதன்​மூலம் 10,400-க்​கும் மேற்​பட்ட ரயில் இன்​ஜின்​கள், 64,000 மீன்​பி​டிப் படகு​கள் நேரலை​யில் கண்​காணிக்​கப்​படு​கின்​றன. வாக​னங்​களைக் கண்​காணிக்க இது​வரை 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கரு​வி​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த முறை என்​விஎஸ்-02 செயற்​கைக்​கோள் ஏவுதலில் பைரோ வால்​வு​கள் தொடர்​பான தொழில்​நுட்​பச் சிக்​கல் ஏற்​பட்​டது. தற்​போது அனைத்து அமைப்​பு​களும் சிறப்​பாகச் செயல்​படு​கின்​றன.

நடப்பு நிதி​யாண்​டில் 2 பிஎஸ்எல்வி, ஒரு ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி, ஜி1 மற்​றும் ஒரு தனியார் ஏவுதல் என 6 திட்​டங்​களை செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளோம். அடுத்​தடுத்து என்​விஎஸ்-04, 05 செயற்​கைக்​கோள்​கள் 5 மாத இடைவெளி​யில் செலுத்​தப்​படும். என் விஎஸ்-02-க்கு மாற்​றுச் செயற்​கைக்​கோளும் செலுத்​தப்​படும்.

ககன்​யான் திட்​டத்​தின்​கீழ் இது​வரை 8,000-க்​கும் மேற்​பட்ட சோதனைகள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​புவதற்கு முன்பு 3 ஆளில்லா விண்​வெளிப் பயணங்​கள் மேற்​கொள்​ளப்​படும். முதல் ஆளில்லா பயணத்​துக்​கான பணிகள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன.

நேவிக் அமைப்பு இந்​தியா மற்​றும் அதைச் சுற்​றியுள்ள 1,500 கி.மீ. தொலைவு வரையி​லான பகுதி​களுக்கு வழிகாட்​டுதல் சேவை வழங்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டது. முதல்​கட்​ட​மாக 7 செயற்​கைக்​கோள்​களைக் கொண்ட கட்​டமைப்பை நிறைவு செய்​வதே இலக்கு. பின்​னர் உல​களாவிய சேவை​யாக விரிவுபடுத்​து​வது குறித்து ஆய்வு செய்​யப்​படும். செல்​போன்​களில் நேவிக் சேவையைப் பயன்​படுத்த 7 செயற்​கைக்​கோள் கட்​டமைப்பு முழு​மையடைய வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூகவலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இஸ்ரோ விஞ்​ஞானிகள் மற்​றும் பொறி​யாளர்களுக்கு எனது வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இந்த ஏவுதல், நமது உள்​நாட்​டிலேயே உரு​வாக்​கப்​பட்ட செயற்​கைக்​கோள் வழிகாட்​டுதல் அமைப்​பான நேவிக்கை வலுப்​படுத்​து​வதில் முக்​கிய​மான முன்​னேற்​றமாகும்.

மேம்​படுத்​தப்​பட்ட திறன்​களைக் கொண்ட என்​விஎஸ்-03 செயற்​கைக்​கோள், முக்​கியத் தொழில்​நுட்​பங்​களில் தற்​சார்பை எட்​டுவதற்​கான நமது முயற்​சிகளை மேலும் முன்​னெடுப்​ப​துடன், மக்​களுக்கு பயனளிக்​கும் வழிகாட்​டுதல் சேவை​களுக்​கும் உதவும். நமது விஞ்​ஞானிகளின் அர்ப்​பணிப்​பும், புது​மையான தொழில்​நுட்​பத் திறனும் தொடர்ந்து நாட்​டுக்​குப் பெருமை சேர்த்து வரு​கின்றன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT