இந்தியா

பான் மசாலா பொருளை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்

15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மகாராஷ்டிர உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலத்​தில் பான் மசாலா விற்​பனைக்கு முழு​மையான தடை விதிக்​கப்​பட்​டுள்ளது. 2024-ம் ஆண்டு ‘விமல்’ நிறு​வனத்​தின் ஏலக்​காய் தயாரிப்​புக்காக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகிய 3 நடிகர்​களும் இணைந்து நடித்த விளம்​பரம் வெளி​யானது.

அவர்கள் 3 பேருக்கும் மகா​ராஷ்டிர உணவு பாது​காப்பு ஆணையம் அனுப்​பி​யுள்ள நோட்​டீஸில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: விமல் எலச்சி என்ற பெயரில் வெளிவந்​துள்ள இந்த விளம்​பரம், மாநிலத்​தில் தடைசெய்​யப்​பட்ட பான் மசாலா பிராண்​டுடன் நேரடி​யாகத் தொடர்​புடைய​தாகத் தோன்​றுகிறது. இந்த விளம்பரப் பிரச்​சா​ரத்​தில் பங்​கேற்​பதை நடிகர்​கள் உடனடி​யாக நிறுத்த வேண்​டும்.

மேலும், இது தொடர்​பான அனைத்து பதிவு​களை​யும் தங்​களது அதி​காரப்​பூர்வ சமூக வலை​தளப் பக்​கங்​களில் இருந்து உடனடியாக நீக்க வேண்​டும். இவ்​வாறு அந்த நோட்​டீஸில் தெரி​விக்கப்பட்டுள்​ளது. நுகர்​வோர் பாது​காப்​புச் சட்​டத்​தின் கீழ், தவறாக வழிநடத்​தக்​கூடிய விளம்​பரங்​களில் நடிக்​கும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்​சம் முதல் ரூ.50 லட்​சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், அவர்​கள் விளம்​பரங்​களில் நடிக்க 3 ஆண்​டு​கள் வரை தடை விதிக்​கப்​பட​வும் வாய்ப்​புள்​ளது. முன்​ன​தாக 2022-ம் ஆண்​டு, இதே நிறு​வனத்​தின் விளம்​பரத்​தில் நடித்​ததற்​காக நடிகர் அக் ஷய் குமார் பகிரங்​க மன்​னிப்​பு கோரி​னார்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT