அசாம் முதல்வர் ஹிமந்தா

 
இந்தியா

மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை: அசாம் முதல்வர் ஹிமந்தா விளக்கம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாமில் மாட்​டிறைச்சி உண்​பது குறித்த தனது நிலைப்​பாட்டை முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்​ளார். என்​றாலும் முந்​தைய நிலைப்​பாட்​டில் இருந்து அவர் பின்​வாங்கி விட்​ட​தாக சமாஜ்​வா​தி, ஆம் ஆத்மி ஆகிய கட்​சிகள் விமர்​சனம் செய்​துள்​ளன.

இது தொடர்​பாக ஹிமந்த பிஸ்வா சர்​மா, செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “முஸ்​லிம்​கள் மாட்​டிறைச்சி சாப்​பிடு​கிறார்​கள். அதற்​குத் தடை ஏதும் இல்​லை. அசாமில் மாட்​டிறைச்சி சாப்​பிடும் முஸ்​லிம் சமூகம் பெரிய அளவில் உள்​ளது. அவர்​களைச் சாப்​பிட வேண்​டாம் என்று நாங்​கள் சொல்​ல​வில்​லை. உங்​கள் வீடுகளுக்குள் வைத்​துச் சாப்​பிடுங்​கள், பொது இடங்​களில் வேண்டாம் என்​று​தான் சொல்​கிறோம்” என்​றார்.

"மாட்​டிறைச்சி சாப்​பிடு​வோர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும், மாட்​டிறைச்சி சாப்​பிடு​பவர்​களை விட​மாட்​டேன்" என்று ஹிமந்தா ஏற்​கெனவே கூறி​யிருந்த நிலை​யில் தற்​போது அவர் மாறு​பட்ட கருத்தை கூறி​யிருப்​பது அரசி​யல் சர்ச்​சையை ஏற்படுத்தி​யுள்​ளது. ஹிமந்​தா​வின் கருத்தை சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் 'எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்​து, “பாஜகவை அகற்​று​வோம், கோமா​தாவை பாது​காப்​போம்" என்று பதிவிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT