இந்தியா

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் நிதிஷ்

விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார் மாநிலங்​களவை எம்​.பி.​யாக நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டார்.

ஐக்​கிய ஜனதா தள தலை​வ​ர் நிதிஷ் குமார், பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக பதவி வகிக்​கிறார். இந்​நிலை​யில், சமீபத்​தில் நடை​பெற்ற மாநிலங்​கள​வைத் தேர்​தலில் நிதிஷ் குமார் தேர்ந்​தெடுக்​கப்​பட்டார். இதனால் சட்ட மேலவை உறுப்​பினர் பதவியை ராஜி​னாமா செய்​தார்.

          

இந்​நிலை​யில், நிதிஷ் குமார் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து அவர் விரை​வில் பிஹார் முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்​வார் என கூறப்​படு​கிறது. நிதிஷ் குமார் முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்​தால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் (ஜேடி​யு) அங்​கும் வகிக்​கும் பாஜகவைச் சேர்ந்த ஒரு​வர் முதல் முறை​யாக பிஹார் முதல்​வ​ராக பதவி​யேற்​பார்.

இதுகுறித்து ஜேடியு மூத்த தலை​வர் ஷ்ர​வண் குமார் கூறும்​போது, “நி​திஷ் குமார் மாநிலங்​களவை உறுப்​பின​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட போதி​லும், அரசி​யலமைப்பு விதி​களின்​படி 6 மாதங்​கள் வரை அவர் முதல்​வர் பதவி​யில் தொடர முடி​யும்’’ என்​றார்.

பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நாட்டில் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் நிதிஷ் குமார். பிஹார் மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். அவரை மீண்டும் நாடாளுமன்றத்தில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய நீண்ட அரசியல் அனுபவம் நாடாளுமன்ற மாண்புக்கு மேலும் வலு சேர்க்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT