இந்தியா

பெங்களூரு சிறைக்கு செல்போன் கடத்திய 9 பேர் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரு: முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், ஹாசன் மக்​களவை தொகு​தி​யின் முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதாகி, பெங்​களூரு​ பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

சமீபத்​தில் இவர் சிறைக்​குள் செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளி​யானது. இதையடுத்​து, சிறைத் துறை அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 21 செல்​போன்​கள், 17 சிம் கார்​டு​கள் உள்​ளிட்​டவை சிக்​கின. இதுதொடர்​பாக சிறைத் துறை ஊழியர்​கள் 3 பேர் உட்பட 9 பேர் கைது செய்​யப்பட்டனர்.

SCROLL FOR NEXT