இந்தியா

​திமாகி நக்சல்களை ஒழிப்பதுதான் அடுத்த இலக்கு: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் பஸ்​தர் பகு​தி​யில் சிஆர்​பிஎப் வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்​டாடிய பிரதமர் நரேந்​திர மோடி, “நக்சலைட்கள் ஒழிக்கப்​பட்​டு​விட்​டனர். ‘தி​மாகி நக்சல்கள்’ (மனதளவில் நக்சல்கள்) பல அரசி​யல் கட்​சிகளி​லும் பல்​வேறு அமைப்​பு​களி​லும் ஊடுரு​வி​யுள்​ளனர். அவர்​களை தோற்கடித்​து, தேசத்​தின் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும்” என தெரி​வித்​தார்.

மோடி​யின் இந்த கருத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் விமர்சித்திருந்தார். இதற்கு மத்திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு, “ராகுல் காந்​தி, ஆயுதமேந்​திய நக்​சல்​களை ஒழித்​ததற்​காக மோடிக்கு நன்றி சொல்​லுங்​கள். முன்​னாள் பிரதமர் டாக்​டர் மன்​மோகன் சிங், இடது​சாரி தீவிர​வாதம் மற்​றும் நக்​சலிசத்தை இந்தியா​வின் மிகப்​பெரிய உள்​நாட்​டுப் பாது​காப்பு அச்​சுறுத்​தல் என்று விவரித்​ததை நான் உங்​களுக்கு நினை​வூட்​டு​கிறேன். அடுத்த இலக்கு தி​மாகி நக்​சல்​களை ஒழிப்​பது​தான்'' என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT