புதுடெல்லி: மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி பிரசாந்த் மொஹிதே தேரவை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி சங்கம் குமார் சாகுவை பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இருவரையும் தலைமை நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.