ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் 'ஐபோன் டியோ' மாடல்

 
இந்தியா

மடிக்கும் வசதி கொண்ட ஆப்பிள் ஐ போன் விலை ரூ.4.5 லட்சம்: மாருதி கார் அல்லது 30 கிராம் தங்கம் வாங்கலாம் - இணையத்தில் புது விவாதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் 'ஐபோன் டியோ' (iPhone Duo) மாடலை செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.2,99,900 ஆகவும், உயர்தர 2 டிபி மாடலின் விலை ரூ.4,49,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகமாறியுள்ள நிலையில், இந்த ரூ.4.5 லட்சத்தைக் கொண்டு ஒரு புதிய கார் வாங்கலாம், 96 முறை விமானப் பயணம் செய்யலாம் அல்லது 30 கிராம் தங்கம் வாங்கலாம் என என்னவெல்லாம் வாங்க முடியும் என்பதன் சுவாரசியமான பார்வை இதோ.

டியோ மாடல் போனை வாங்கும் பணத்தைக் கொண்டு டெல்லி-மும்பை, மும்பை-பெங்களூரு போன்ற உள்நாட்டுப் பாதைகளில் விமானத்தில் 60 முதல் 96 முறை வரை ஒருவழிப் பயணம் செய்யலாம். அல்லது துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு 30-க்கும் மேற்பட்ட முறை விமானத்தில் பயணம் செய்யலாம்.

ரூ.3.70 லட்சம் ஆரம்ப விலை கொண்ட மாருதி சுசூகி ஆல்ட்டோ K10 புதிய காரை வாங்கிவிட்டு, கைவசம் ரூ.80,000 மீதம் வைக்கலாம். அல்லது சற்று கூடுதலாகச் சேர்த்து டாட்டா டியாகோ காரையும் வாங்கலாம்.

சமீபத்திய நிலையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1.53 லட்சம் எனில், ரூ.4.5 லட்சத்துக்கு வரிகள் இன்றி சுமார் 29 கிராம் தங்கம் வாங்கலாம். ஆனால் தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொட நினைப்பவர்களுக்கு இந்த ஐபோன் டியோ ஒரு கனவுப் பொருளாக இருக்கலாம்.

SCROLL FOR NEXT