இந்தியா

புதிய தலைமை தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நாளை பதவியேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பு​திய தலைமை தகவல் ஆணை​ய​ராக ராஜ் குமார் கோயல் நியமிக்​கப்​பட்​டுள்​ள​தாகவும் நாளை பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மத்​திய அரசின் தலை​மைத் தகவல் ஆணை​ய​ராக (சிஐசி) இருந்த ஹிராலால் சமாரி​யா, கடந்த செப்​டம்​பர் 13-ம் தேதி ஓய்​வு​ பெற்​றார். அந்​தப் பதவி காலி​யாக உள்​ளது. மேலும், 10-ல் 8 தகவல் ஆணை​யர்​கள் பதவி கடந்த 2023-ம் ஆண்டு முதல் காலி​யாக உள்​ளது. ஆனந்தி ராமலிங்​கம், வினோத் குமார் திவாரி ஆகிய தகவல் ஆணை​யர்​களு​டன் மத்​திய தகவல் ஆணை​யம் இயங்கி வரு​கிறது.

இதையடுத்து பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான 3 உறுப்​பினர்​களைக் கொண்ட தேர்​வுக் குழு கூட்​டம் நாடாளு​மன்ற வளாகத்​தில் உள்ள பிரதமரின் அறை​யில் கடந்த 11-ம் தேதி நடை​பெற்​றது. இதில் மத்​திய உள் துறை அமைச்​சர் அமித் ஷா, எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஆகியோர் பங்​கேற்​றனர்.

இக்​கூட்​டத்​தில், மத்​திய அரசின் தலைமை தகவல் ஆணை​யர், 8 தகவல் ஆணை​யர்​களை தேர்வு செய்​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. இது​மட்​டுமின்றி மத்​திய ஊழல் கண்​காணிப்பு ஆணை​யத்​துக்கு புதிய தலை​வரைத் தேர்வு செய்​வது தொடர்​பாக​வும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

அப்​போது இந்​தப் பதவி​களுக்கு பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு சிலரது பெயர்​களை பரிந்​துரை செய்​த​தாக​வும், அதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரி​வித்​த​தாக​வும் தகவல் வெளி​யானது.

இந்த சூழ்​நிலை​யில், மத்​திய சட்​டம் மற்​றும் நீதித் துறை முன்​னாள் செய​லா​ளர் ராஜ் குமார் கோயல் தலைமை தகவல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இது​போல, ரயில்வே வாரிய முன்​னாள் தலை​வர் ஜெயா வர்மா சின்ஹா மற்​றும் சட்ட நிபுணரும் பெட்​ரோலி​யம், இயற்கை எரி​வாயு ஒழுங்​கு​முறை வாரி​யத்​தின் உறுப்​பினரு​மான சுதா ராணி ரெலங்கி ஆகிய 2 பெண்​கள் உட்பட 8 தகவல் ஆணை​யர்​களும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இது

த​விர, இந்​திய வனத்​துறை முன்​னாள் அதி​காரி குஷ்வந்த் சிங் சேத்​தி, முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி ஸ்வாகத் தாஸ், மூத்த பத்​திரி​கை​யாளர் பி.ஆர்​.ரமேஷ், சமூக நீதித் துறை முன்​னாள் செய​லா​ளர் சுரேந்​திர சிங் மீனா, அஷுடோஷ் சதுர்​வேதி மற்​றும் சஞ்​சீவ் குமார் ஜிண்​டால் ஆகிய 6 பேர் புதிய தகவல் ஆணை​யர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ள​னர். இவர்கள் வரும் நாளை பதவியேற்றுக் கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்​கெனவே ஒரு பெண் (ஆனந்தி ராமலிங்​கம்) இப்​ப​த​வி​யில் இருப்​ப​தால் பெண்​கள் எண்​ணிக்கை 3 ஆக உயர்ந்​துள்​ளது. இது​போல, கடந்த 7 ஆண்​டு​களில் முதல் முறை​யாக இப்​போது​தான் மத்​திய தகவல் ஆணை​யம் முழு உறுப்​பினர்​களைக்​ கொண்​ட​தாக (10) செயல்​பட உள்​ளது.

SCROLL FOR NEXT