இந்தியா

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் பேசியது இல்லை: சுயசரிதை புத்தகத்தில் சோனியா காந்தி தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் நேருக்கு நேர் பேசியது கிடை​யாது என்று சோனியா காந்தி தெரி​வித்​துள்​ளார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி எழு​திய “பிளாங்​கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்” என்ற சுயசரிதை புத்​தகம் நேற்று வெளி​யானது. ஏழு அத்​தி​யா​யங்​கள், 544 பக்​கங்​களை கொண்ட இந்த புத்தகத்தில் தனது வாழ்​நாளின் முக்​கிய தருணங்​களை அவர் நினை​வு​கூர்ந்து உள்​ளார்.

சுயசரிதை நூலில் அவர் கூறியிருப்பதாவது:

நாடாளு​மன்ற கூட்​டத் தொடர்​களின்​போது சபா​நாயகரின் அறையில் பிர​தான அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் ஒன்​று கூடு​வது வழக்​கம். சபா​நாயகரின் அறைசிறியது. அப்​போது பிரதமர் நரேந்​திர மோடியை சந்​திப்​பேன். இரு​வரும் பரஸ்​பரம் வணக்​கம் மட்​டுமே கூறு​வோம்

.கடந்த காலத்​தில் சபா​நாயகரின் அறை​யில் மூத்த தலை​வர்கள் சந்​திக்​கும்​போது நட்பு பாராட்​டு​வார்​கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வேறு பக்​க​மாக திரும்பி விடு​வார். கண் பார்த்​து, முகம் பார்த்து பேச மாட்​டார். அவருடன் நேருக்கு நேர் பேசி​யது கிடையாது. சில நேரங்​களில் என்​னுடைய உடல்​நலம் குறித்து விசா​ரித்து உள்​ளார். அப்​போது​கூட சில வார்த்​தைகளில் மட்​டுமே உரை​யாடி உள்​ளோம். எங்​கள் இரு​வரின் கொள்​கைகளும் வெவ்வேறானவை. நான் மகாத்மா காந்தி காட்​டிய அஹிம்சை வழி​யில் நடக்​கிறேன்.

பல்​வேறு இனங்​கள், மொழிகள், கலாச்​சா​ரங்​கள், அனைத்து மதத்தினரை​யும் அரவணைத்து செல்​லும் கொள்​கையை பின்​பற்றுகிறேன். பிரதமர் மோடி ஆர்​எஸ்​எஸ் அமைப்​பால் வளர்க்கப்பட்​ட​வர். அவர் அந்த அமைப்​பின் கொள்​கைகளைப் பின்​பற்​றுகிறார். அரசி​யல் கொள்கை ரீதி​யாக இரு​வரும் வேறுபட்டிருக்​கிறோம். ஆனால் தனிப்​பட்ட பகை கிடை​யாது. கடந்த 2002-ம் ஆண்​டில் சபர்​மதி எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் 59 கரசேவகர்​கள் உயி​ரிழந்​தது, அதன்​ பிறகு குஜ​ராத்​தில் ஏற்​பட்ட கலவரம் ஆகியவை மிக​வும் துயர​மானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்​திரா காந்​திக்​கும், மேனகா காந்​திக்​கும் இடையே ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு, பிரணாப் முகர்​ஜி​யின் பிரதமர் கனவு, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்​டனின் பெண்​கள் மீதான ஈர்ப்​பு உட்பட பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து சோனியா காந்தி குறிப்​பிட்டு உள்​ளார்.

பிரதமர் பதவியை மறுத்​தேன்

கடந்த 2004-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தல் முடிவு​கள் வரு​வதற்கு முன்​பாகவே பிரதமர் பதவியை ஏற்​கக்கூ​டாது என்று முடிவு எடுத்து​விட்​டேன். இந்​திரா, ராஜீவ் படு​கொலைகளால் எனது மகன் ராகுல், மகள் பிரி​யங்கா மிக மோச​மாக பாதிக்​கப்​பட்டு இருந்தனர். நான் பிரதம​ரா​னால் எனக்​கும் அதே நிலை ஏற்​படக்​கூடும் என்று கவலைப்​பட்​டனர். தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகும் நான் பிரதம​ராக பதவி​யேற்க காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் வலியுறுத்தினர். ஆனால் நான் திட்​ட​வட்​ட​மாக மறுத்​து​விட்​டேன் என்று சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார்.

மரணத்துக்கு தயா​ரான இந்​திரா

புளூஸ்டார் ஆபரேஷன் தொடர்​பான புகைப்​படங்​களை அன்றைய பிரதமர் இந்​திராவிடம் அதி​காரி​கள் காட்​டிய​போது அவர் கண்​ணீர் வடித்​தார். இதன்பிறகு அவருக்கு ஏராள​மான கொலை மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்​டன. இதுகுறித்து பேரன் ராகுலிடம் இந்​திரா காந்தி அப்​போதே மனம் திறந்து பேசி​னார். “நான் மரணத்தை எதிர்​கொள்ள தயாராக இருக்​கிறேன். நீ தைரியமாக இருக்க வேண்​டும். எந்த சூழலிலும் அழக்​கூ​டாது” என்று அவர் தெரி​வித்​தார். புளூ ஸ்டார் ஆபரேஷனுக்கு பிறகு 5 மாதங்​கள் கழித்​து சொந்​த பாது​காவலர்​களாலேயே இந்​தி​ரா காந்தி சுட்​டுக்​ கொல்​லப்​பட்​டார்​.

முதல் குழந்தை உயி​ரிழப்பு

கடந்த 1969-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி எனக்கு முதல் குழந்தை பிறந்​தது. முன்​கூட்​டியே குழந்தை பிறந்​த​தால் இன்​குபேட்​டரில் வைத்து பராமரித்​தனர். ஆனால் அடுத்த நாளே குழந்தை உயிரிழந்​து​விட்​டது. மத சம்​பிர​தா​யங்​களின்​படி குழந்​தை​யின் உடலை ஆற்​றில் வீச வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர். இதை என்னால் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. நதி​யில் வீசப்​படும் எனது குழந்​தை​யின் உடல் கரை ஒதுங்கி நாய்​கள் இழுத்​துச் செல்​லும் நிலை ஏற்​படக்​கூ​டாது என்றேன். பின்னர் மெக்​ராலி​யில் உள்ள பெரோஸ் காந்​தி​யின் பண்ணை வீட்​டில் குழந்​தை​யின் உடல் அடக்​கம் செய்​யப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT