புதுடெல்லி: இண்டியா கூட்டணியில் மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்திந்திய மாணவர் சங்கத் (ஏஐஎஸ்ஏ) தலைவர் நேஹா போரா சில சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார்.
அவரது கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறும்போது, “நேஹா போராவின் கருத்துகள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியால் ஈர்க்கப்பட்டவை. ஏனெனில், கோயில்களுக்குள் பெண்களுக்கு தொல்லை கொடுக்கப்படுவதாக ராகுல் முன்பு கூறியது உங்கள் நினைவில் இருக்கலாம்.
காங்கிரஸின் சனாதன தர்மத்துக்கு எதிரான சித்தாந்தப் பிரச்சாரத்தையே நேஹா போராவின் கூற்றுபிரதிபலிக்கிறது.
இது ஒட்டுமொத்த காங்கிரஸ் சித்தாந்தமும் சிந்தனையும் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அவர்கள் சனாதனத்தைக் களங்கப்படுத்தி இந்து மதத்தைக் குறிவைக்கிறார்கள். இது அவர்களின் வகுப்புவாத மனநிலையை வெளிப்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ இந்து விரோதம், அரசியலமைப்பு விரோதம், சனாதன விரோதம் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.