இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: கைதான 10 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இளநிலை மருத்​து​வப் படிப்​புக்​கான ‘நீட்' நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்​தது.

வினாத்​தாள் முன் ​கூட்​டியே கசிந்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​த​தால் இத்​தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு மறு​ தேர்வு நடத்​தப்​பட்​டது. இந்நிலை​யில் வினாத்​தாள் கசிவு வழக்​கில் மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்தான், ஹரி​யா​னா, பிஹார் ஆகிய மாநிலங்​களில் அடுத்தடுத்து 13 பேரை சிபிஐ கைது செய்​தது.

இவர்​களில் 10 பேரின் நீதி​மன்ற காவல் நிறைவடைந்​தது. இதையடுத்​து, 10 பேரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதி​மன்றத்தில் நேற்று காணொலி மூலம் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். அப்​போது 10 பேரின் நீதி​மன்ற காவலை ஜூலை 11 வரை நீட்​டித்து நீதிபதி உத்தர​விட்​டார்.

SCROLL FOR NEXT