மும்பை: நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ 9 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள ஷிவ்நகர் பகுதியில், ஓம்கார் ரெசிடென்சியில் இயங்கி வந்த ‘ரேணுகாய் கெமிஸ்ட்ரி கிளாசஸ்' (ஆர்சிசி) என்ற பயிற்சி மையத்தின் இயக்குநர் மொடேகான்கருக்கு, தேர்வுக்கு 10 நாள் முன்பே வினாத்தாள் கிடைத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.