இந்தியா

நீட் முதுநிலை தேர்வு கட் - ஆஃப் மதிப்பெண்: பொதுநல மனு தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் முதுநிலை தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஹரிசரண் தேவ்கான் உள்ளிட்ட நால்வர் சார்பில் வழக்கறிஞர் நீமா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘தேசிய தேர்வுகள் வாரியம் கடந்த 13-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், நீட் முதுநிலை தேர்வு கட் -ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியத்துக்கு கீழே குறைத்துள்ளது. இதனால் மருத்துவக் கல்வித் தரம் பாதிக்கப்படும். எனவே இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT