இந்தியா

செல்போன் தொலைந்த நிலையில் தேசிய விருது பெற்ற விவசாயி சைபர் மோசடியில் ரூ.83,000 இழந்தார்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: செல்​போன் தொலைந்து போனதை தொடர்ந்​து, தேசிய விருது பெற்ற விவ​சாயி ஒரு​வர் சைபர் மோசடி​யில் ரூ.83,244 இழந்​துள்​ளார்.

மேற்கு வங்​கத்தை சேர்ந்த விவ​சாயி ஷைலன் சாண்​டி. இயற்கை வேளாண்​மையை ஊக்​கு​வித்​ததற்​காக இவர், கடந்த 2019-ம் ஆண்டு தேசிய விருது பெற்​றுள்​ளார். இவரது செல்​போன் கடந்த மார்ச் 29-ம் தேதி தொலைந்து போனது. இது குறித்து காவல் நிலையத்​தில் உடனே புகார் அளித்த அவர், மாற்று சிம் கார்டுக்கும் விண்​ணப்​பித்​துள்​ளார்.

இந்​நிலை​யில் புதிய சிம் கார்டை பெற்ற பிறகு, மார்ச் 31ம் தேதி அவரது வங்​கிக் ​கணக்​கில் இருந்து இரு பரிவர்த்​தனை​களில் ரூ.10 ஆயிரம் எடுக்​கப்​பட்​ட​தாக எஸ்​எம்​எஸ் வந்​துள்​ளது. இதைக் கண்டு ஷைலன் சாண்டி அதிர்ச்சி அடைந்​தார்.

ஏப்​ரல் 1ம் தேதி சாந்​திபூர் காவல் நிலை​யம் மற்​றும் சைபர் க்ரைம் பிரி​வில் தனித்​தனியே புகார் அளித்​தார். எனினும் மோசடி அத்துடன் நிற்​க​வில்​லை. ஏப்​ரல் 2-ம் தேதி மற்​றொரு பொதுத்துறை வங்​கி​யில் உள்ள அவரது கணக்​கி​லிருந்து 12 பரிவர்த்​தனை​கள் மூலம் ரூ.73,244 எடுக்​கப்​பட்​ட​தாக எஸ்​எம்​எஸ் வந்​துள்​ளது.

இதையடுத்து அந்த விவ​சா​யி, இரு வங்​கி​களின் மேலா​ளர்​கள், அவர்​களின் நோடல் அதி​காரி​கள், சைபர் கிரைம் பிரிவு மற்​றும் இந்​திய ரிசர்வ் வங்​கி​யின் முதன்மை கிளைக்கு புகார் அனுப்பினார். அந்த இரு வங்​கிக் கணக்​கு​களி​லும் ஆன்​லைன் பேங்​கிங் வசதி செயல்​பாட்​டில் இல்​லை, மேலும் ஷைலன் சாண்டியிடம் ஏடிஎம் கார்​டும் இல்​லை. ஏடிஎம் கார்டோ அல்​லது ஆன்​லைன் பேங்​கிங் வசதியோ இல்​லாமல், இவ்​வளவு பெரிய தொகை எப்​படி டிஜிட்​டல் முறை​யில் எடுக்​கப்​பட்​டது என்​பதை வங்கி அதி​காரி​களாலேயே விளக்க முடிய​வில்லை என்று கூறப்படு​கிறது.

இந்​நிலை​யில் தொடர்ந்து நினை​வூட்​டல் கடிதங்​கள் அனுப்​பிய போதி​லும், மூன்​றரை மாதங்​களுக்​கும் மேலாகி​யும் சந்தேகத்திற்குரிய நபர்​கள் யாரும் அடை​யாளம் காணப்படவில்லை என்று அவர் கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT