இந்தியா

“இதுவரை இப்படியொரு பிரதமரை தேசம் கண்டதில்லை” - அபிஜித் திப்கே ட்வீட்

வேட்டையன்

புதுடெல்லி: “இதுவரை இப்படியோரு பிரதமரை தேசம் கண்டதில்லை” என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, ட்வீட் செய்துள்ளார்.

நேற்று (அக்.10) டெல்லி போலீஸார் விமானத்துக்குள் அவரையும், சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், இன்று அவர்கள் மூவரையும் நிபந்தனையின் பேரில் நீதிமன்றம் விடுவித்தது. இந்நிலையில், விடுதலையான சில நிமிடங்களில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அபிஜித் திப்கே ட்வீட் செய்துள்ளார்.

“பிரதமர் மோடி நாட்டுக்கு சங்கடமாக இருக்கிறார். இப்படியொரு கோழையை, அடாவடித்தனம் செய்பவரை இந்த தேசம் இதுவரை கண்டதில்லை.

சிஜேபி சார்பில் செய்தியாளர்களை டெல்லியில் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் சந்திப்பார்கள். சிஜேபி ஒருபோதும் பின்வாங்காது, அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது. அக்.10-ம் தேதி சர்வாதிகாரத்தின் முடிவின் தொடக்கமாக வரலாற்றில் இடம்பெறும்” என்று அந்த ட்வீட்டில் அவர் கூறியுள்ளார்.

தனது பாட்டியின் மறைவை அடுத்து பூர்விக கிராமத்துக்கு அபிஜித் திப்கே புறப்பட்டுள்ளார். அங்கு குடும்பத்தினருடன் அவர் துக்கத்தில் பங்கேற்கிறார்.

முன்னதாக, நேற்று காலை கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட்டில், “எங்கள் போராட்டம் தொடங்கும் முன்பு தனது தோல்வியை மோடி ஒப்புக்கொண்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட முயல்பவர்களை ஒடுக்குவதும், டெல்லியை முடக்குவதும் வலிமையின் அறிகுறிகள் அல்ல. அதற்கு மாறாக சொந்த நாட்டு மக்களையே கண்டு அஞ்சும் ஒரு தலைவரின் நிலையை காட்டுகின்றன” என்று பதிவிட்டிருந்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சனிக்கிழமை (அக்.10) அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது சிஜேபி.

இதில் பங்கேற்க மும்பையில் இருந்து அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விமானத்தில் டெல்லி வந்தனர். அவர்களை விமானத்துக்குள் டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்தச்தனது பாட்டியின் மறைவை அடுத்து பூர்விக கிராமத்துக்கு அபிஜித் திப்கே புறப்பட்டுள்ளார். அங்கு குடும்பத்தினருடன் அவர் துக்கத்தில் பங்கேற்கிறார். சூழலில் இன்று அவர்களை விடுத்துள்ளார் டெல்லி சிறப்பு மாஜிஸ்திரேட்.

SCROLL FOR NEXT