இந்தியா

‘மக்களை கண்டு அஞ்சும் மோடி அரசு’ - புதிய சட்டத்தை கண்டித்து கேஜ்ரிவால் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய அரசு புதி​தாகக் கொண்​டு​வந்​துள்ள சமூக ஊடகச் சட்​டம், அரசுக்கு எதி​ரான விமர்​சனங்​களை நசுக்​கு​வதையே முக்​கிய நோக்​க​மாகக் கொண்​டது. இது, அதி​கரித்து வரும் மக்​கள் போராட்​டங்​களைக் கண்டு பிரதமர் நரேந்​திர மோடி பயப்​படத் தொடங்கி விட்​டார் என்​ப​தையே காட்​டு​கிறது என ஆம் ஆத்மி கட்​சி​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ஆம்​ஆத்மி கூட்​டத்​தில் கேஜ்ரிவால் கூறிய​தாவது: மோடி அரசு புதிய சட்​டம் ஒன்​றைக் கொண்​டு​வந்​துள்​ளது. அதன்​படி இன்​ஸ்​டாகி​ராம், ஃபேஸ்​புக் அல்​லது வேறு எந்த சமூக ஊடகத் தளமாக இருந்​தா​லும், ஒரு பதிவு அல்​லது வீடியோவை நீக்​கு​மாறு அரசு கோரி​னால், அதை 3 மணி நேரத்​திற்​குள் அந்த நிறு​வனம் நீக்க வேண்​டும்.

சமீபத்​தில் இளைய தலை​முறை​யினர் நடத்​திய போராட்​டங்​கள் மற்​றும் ஜந்​தர் மந்​தரில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டங்​களுக்​குப் பிறகு பிரதமர் மிக​வும் கவலை​யடைந்​துள்​ளார். பிரதமர் மோடி இந்த நாட்டு மக்​களைக் கண்டு பயப்​படு​கிறார்; இளைஞர்​கள், குழந்​தைகள் மற்​றும் பெண்​களைக் கண்டு அஞ்​சுகிறார். ஜந்​தர் மந்​தர் போராட்​டங்​களுக்​குப் பிறகு அவர் அச்​சத்​தில் மூழ்​கி​யுள்​ளார். இவ்வாறு கேஜ்ரி​வால் பேசி​னார்.

SCROLL FOR NEXT