இந்தியா

கொல்கத்தாவில் 17 தொகுதிகளின் வெற்றியை முடிவு செய்யும் முஸ்லிம்கள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் 25 சதவி​கிதம் முஸ்லிம்கள் உள்​ளனர். குறிப்​பாக தலைநகர் கொல்​கத்​தா​வின் 17 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களின் வெற்​றியைத் தீர்​மானிப்​பது முஸ்லிம்​கள்​தான்.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்​தலில் கொல்​கத்​தா​வின் இந்த 17 தொகு​தி​களை​யும் மம்தா பானர்​ஜி​யின் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி கைப்​பற்​றியது. ஆனால், இந்த முறை ஆளும் திரிணமூல் கட்சி மீண்​டும் பெறுமா அல்​லது பாஜக தட்டி விடுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

கொல்​கத்​தா​வின் மெட்​டி​யாபுருஸ் தொகு​தி​யில் சுமார் 60 சதவி​கித முஸ்​லிம் வாக்​காளர்​கள் உள்​ளனர். இந்​நகரின் துறை​முகத் தொகு​தி​யில் சுமார் 51 சதவி​கிதம் மற்​றும் பாலிகஞ்ச் தொகு​தி​யில் 50 சதவி​கிதம் முஸ்​லிம் வாக்​காளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

          

இந்​தத் தொகு​தி​கள் அதன் வேட்​பாளர் வெற்​றி, தோல்​வியை நேரடியாக முஸ்​லிம்​கள் தீர்​மானிக்​கும் வகை​யில் அமைந்துள்​ளன. என்​டலி மற்​றும் சவுரிங்கி போன்ற தொகு​தி​களில் முஸ்​லிம் மக்​கள் தொகை சுமார் 40 சதவீத​மாக​வும் உள்​ளனர்.

இம்​முறை கொல்​கத்​தா​வின் பவானிபூர் தொகு​தி​யில் முதல்​வர் மம்தா மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடு​கிறர். அதனால் இந்​தத் தொகுதி அனை​வரின் கவனத்​தில் உள்​ளது.

மேலும், சிபிஎம் கட்​சி​யைச் சேர்ந்த ஜிப் பிஸ்​வாஸ், காங்​கிரஸில் பிரதீப் பிர​சாத் போட்​டி​யிடு​கின்​றனர். அத்​துடன் புதிய முஸ்​லிம் கட்சி தொடங்​கி​யுள்ள ஹுமாயூன் கபீர், தனது ஜேயுபி சார்​பில் பூனம் என்​பவரை வேட்​பாள​ராக நிறுத்தி உள்​ளார்.

வாக்​குரிமை இழப்பு: இத்​தொகு​தி​யில் 76 சதவீத வாக்​காளர்​கள் இந்​துக்​கள். சுமார் 24 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள். தவிர பவானிபூரில் உ.பி., பிஹார், ஜார்​க்கண்ட் மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களின் எண்​ணிக்​கை​யும் கணிச​மாக உள்​ளது. இவர்​களு​டைய வாக்​கு​கள் முஸ்​லிம் வாக்​கு​களில் இருந்து மாறு​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன.

மேலும், வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்​தின் போது, பல லட்​சம் முஸ்​லிம்​கள் வாக்​குரிமையை இழந்​துள்​ளனர். எனவே, பவானிபூர் தேர்​தல் முடிவு எப்​படி இருக்​கும்​ என்​பது மே 4-ம்​ தேதி வாக்​கு எண்ணிக்​கை​யின்​ போது தெரிய வரும்​.

SCROLL FOR NEXT