இந்தியா

2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்த பிறகு செல்​வாக்கை அதி​கரித்து வரு​கிறது. அதை சமாளிக்க முடி​யாமல், தேர்​தலின் போது வேட்​பாளர்​களைத் தேர்வு செய்​யும் போது எதிர்க்​கட்​சிகள் வேறு​வகை​யான மாற்​றங்​களைச் செய்து வரு​கிறது.

குறிப்​பாக மாநில சட்​டப்​பேர​வை​களில் முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களின் எண்​ணிக்கை 2013-ம் ஆண்டு 339 ஆக இருந்​தது. தற்​போது அது 282 ஆக குறைந்​துள்​ளது.

உத்தர பிரதேசத்​தில் சுமார் 25 சதவீத முஸ்​லிம்​கள் உள்ள சட்​டப்​பேர​வை​யின் மொத்த உறுப்​பினர்​கள் 403. ஆனால், தற்​போது 31 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​கள் மட்​டுமே உள்​ளனர். இதற்கு முன் உ.பி.​யில் 63 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​கள் இருந்​துள்​ளனர். இதே​போல் பிஹாரில் 19-ல் இருந்து 11, ராஜஸ்​தானில் 11-ல் இருந்து 6 ஆக முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களின் எண்​ணிக்கை குறைந்​துள்​ளது.

அசாம், மேற்கு வங்க மாநிலங்​களில் 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முறையே 8 மற்​றும் 9 முஸ்​லிம் வேட்​பாளர்​களை பாஜக நிறுத்​தி​யது. ஆனால், அசாமில், அனைத்து முஸ்​லிம் வேட்​பாளர்​களும் தோல்​வியடைந்​தனர். அதன்​பின் கட்​சி​யில் சிறு​பான்​மை​யினர் பிரிவையே பாஜக கலைத்து விட்​டது. இந்த முறை 2 மாநிலங்​களி​லும்​ ஆட்சி அமைத்த பாஜக, ஒரு முஸ்​லிம் வேட்​பாளரைக் கூட நிறுத்​த​வில்​லை. தேசிய அளவில் மணிப்​பூரைச் சேர்ந்த அச்​சப் உத்​தின் மற்​றும் திரிபு​ராவைச் சேர்ந்த தபஸ்​ஸுல் ஹுசைன் ஆகிய 2 பேர் மட்​டுமே பாஜக.​வில் முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களாக உள்​ளனர். முஸ்​லிம் எண்​ணிக்​கைக்​கும் மாநில சட்​டப்​பேர​வை​களில் அதன் உறுப்​பினர்​களுக்​கு​மான இடைவெளி மிக​வும் அதி​க​மாக உள்​ளது. மேற்கு வங்க மாநிலத்​தில் சுமார் 30 சதவீதம் இருந்​தும் சட்​டப்​பேர​வை​யில் 12.6 சதவீத முஸ்​லிம்​கள் மட்​டுமே உள்​ளனர்.

பிஹாரில் 17 சதவீத முஸ்​லிம்​கள் இருந்​தும் ​பேர​வை​யில் 4.5 சதவீதம் மட்​டுமே இடம் பெற்​றுள்​ளனர். மகா​ராஷ்டிரா மற்​றும் கர்​நாட​கா​வில் முஸ்​லிம்​கள் 10 சதவீதத்​துக்​கும் அதி​க​மானோர் உள்​ளனர். ஆனால், சட்​டப்​பேர​வை​களில் 3 முதல் 4 சதவீதம் மட்​டுமே உள்​ளனர்.

தேசிய அளவில் அதி​கபட்​ச​மாக சட்​டப்​பேர​வை​களில் 61 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களு​டன் காங்​கிரஸ் முதலிடம் வகிக்​கிறது. இரண்​டாவது இடத்​தில் ஜம்​மு-​காஷ்மீர் தேசிய மாநாட்​டுக் கட்​சி​யில் 39 பேர் உள்​ளனர். அடுத்​தடுத்த நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் 37 மற்​றும் சமாஜ்​வாதி 34 உறுப்​பினர்​களைக் கொண்​டுள்​ளன. கேரளா​வில் மட்​டும் வலு​வான நிலை​யில் 26.56 சதவீத முஸ்​லிம்​களில் 25 சதவீதம் பேர் வென்​றுள்​ளனர். இவர்​கள் ஆளும் காங்​கிரஸ் 8, ஐயுஎம்​எல் 22 எனவும், எதிர்க்​கட்சி கூட்​ட​ணி​யில் சிபிஎம் 4 மற்​றும் சிபிஐ 1 என முஸ்​லிம்​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

தமிழகத்​தில் திமுக 3, ஐயுஎம்​எல் 2, தவெக மற்​றும் காங்​கிரஸ் தலா 1 முஸ்​லிம்​களை வைத்​துள்​ளன. புதுச்​சேரி​யில் 6.05 சதவீத முஸ்​லிம்​கள் இருந்​தும் அவர்​களில் ஒரு​வர் கூட இடம்​பெற​வில்​லை. மேற்கு வங்க மாநிலத்​தில் 59 என்​றிருந்த இவர்​களின் எண்​ணிக்கை தற்​போது முடிந்த தேர்​தலில் 37 எனக் குறைந்​துள்​ளது.

எனினும், இது பாஜக​வால் மட்​டும் நிகழும் மாற்​றமல்ல. நாடு முழு​வதும் உள்ள அனைத்​துக் கட்​சிகளி​லும் இதே நிலைமை தொடர்​கிறது. பல மாநிலங்​களில், சில கட்​சிகள் மிகக் குறைந்த எண்​ணிக்​கையி​லான முஸ்​லிம் வேட்​பாளர்​களை நிறுத்​தி, மிகப்​பெரிய தேர்​தல் வெற்​றிகளைப் பெற்​றுள்​ளன. இச்​சூழல், எதிர்க்​கட்​சிகளைச் சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை சமூகக் கட்​டமைப்​பு​களு​டன்​ சமநிலைப்​படுத்​த வேண்​டிய கட்​டா​யத்​துக்​குத்​ தள்​ளியுள்​ளது.

SCROLL FOR NEXT