இந்தியா

மறைந்த அஜித் பவார் மீதான வழக்குகளை ரத்து செய்வதே உண்மையான அஞ்சலி: எம்.பி.சஞ்சய் ராவத் கருத்து

செய்திப்பிரிவு

மும்பை: மறைந்த மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் அஜித் பவார் மீது ஏராள​மான ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளன. புனே கூட்டுறவு வங்​கித் தலை​வ​ராக இருந்த போது இவர் மீது ஊழல் புகார் எழுந்தது.

மேலும், வேளாண் துறை, மின்​துறை, மண்​வளப் பாது​காப்பு என அனைத்து துறை​களி​லும் இவர் மீது ஏராள​மான ஊழல் குற்றச்சாட்​டு​களும், வழக்​கு​களும் உள்​ளன. இவர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

          

இந்​நிலை​யில் சிவ சேனா (உத்​தவ் அணி) மாநிலங்​களவை எம்​.பி. சஞ்​சய் ராவத் எக்ஸ் தளத்​தில் நேற்று விடுத்​துள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அஜித் பவாருக்கு புகழஞ்​சலி செலுத்த செய்திதாள்​களில் முழுபக்க விளம்​பரம் செய்​துள்​ளது பாஜக.

இந்த விளம்​பரத்​தால் ஒன்​றும் ஆகப்​போவது இல்​லை. அஜித்பவார் மீதான ரூ.70,000 கோடி மதிப்​பிலான ஊழல் குற்​றச்​சாட்​டு​களை பிரதமர் மோடி​யும், மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விசும் திரும்ப பெறு​வ​தே, பாஜக அவருக்கு செலுத்​தும் உண்மையான புகழஞ்​சலி. இவ்​வாறு சஞ்​சய்​ ராவத்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT