பிரதமர் நரேந்திர மோடி

 
இந்தியா

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்

கடைசி இடத்தில் ஜெர்மனி பிரதமர் பிரெடரிக் மெர்ஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உல​கின் 24 ஜனநாயக நாடு​களில் நடத்​தப்​பட்ட மக்​கள் கருத்​துக்​கணிப்​பில், பெரும்​பான்மை ஆதர​வினைப் பெற்று இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடி மீண்​டும் முதலிடம் பிடித்​துள்​ளார். அதேவேளை​யில், மக்​கள் செல்​வாக்கை இழந்த தலை​வர்​களின் பட்​டியலில் ஜெர்​மனி பிரதமர் பிரெடரிக் மெர்ஸ் முதலிடம் பெற்​றுள்​ளார்.

அமெரிக்​காவைச் சேர்ந்த மார்​னிங் கன்​சல்ட் என்ற ஆய்வு நிறு​வனம், பல்​வேறு நாட்​டுத் தலை​வர்​களின் செயல்​பாடு​கள் குறித்து சமீபத்​தில் கருத்​துக்​கணிப்பு ஒன்றை நடத்​தி​யது. இந்த ஆய்​வின் முடிவு​கள் தற்​போது வெளி​யாகி​யுள்​ளன. அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

24 ஜனநாயக நாடு​களில் நடத்​தப்​பட்ட ஆய்​வில் பெரு​வாரி​யான மக்​களின் ஆதர​வைப் பெற்று அதாவது 70 சதவீத மக்​களின் ஆதர​வுடன் இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடி உலகின் மிக​வும் செல்​வாக்கு மிக்க தலை​வ​ராகத் தொடர்ந்து முதலிடத்​தில் உள்​ளார்.

இவருக்கு அடுத்​த​படி​யாக தென் கொரிய அதிபர் லீ ஜே-மி​யுங் 63 சதவீத ஆதர​வுடன் இரண்​டாம் இடத்​தை​யும், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரே பாபிஷ் 55 சதவீத ஆதர​வுடன் மூன்​றாம் இடத்​தை​யும் பிடித்​துள்​ளனர்.

மறு​புறம், ஜெர்​மனி பிரதமர் பிரெடரிக் மெர்​ஸின் செயல்​பாடு திருப்​தி​கர​மாக இல்லை என்று அந்த நாட்டு மக்​களில் சுமார் 76 சதவீதம் பேர் தெரி​வித்​துள்​ளனர். இதன் மூலம் உலக அளவில் செல்​வாக்கு குறைந்த தலை​வர்​கள் பட்​டியலில் அவர் முதலிடத்​தில் உள்​ளார்.

இவருக்கு அடுத்​த​படி​யாக பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் 75 சதவீத மக்​களின் அதிருப்​தி​யைப் பெற்​று, செல்​வாக்கு குறைந்த தலை​வர்​களில் இரண்​டாம் இடத்​தில் உள்​ளார். ஈரான் உடனான போர்ச் சூழலுக்கு மத்​தி​யிலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 38 சதவீத மக்​களின்​ ஆதர​வைப்​ பெற்​றுள்​ளார்​. இவ்​​வாறு அந்​த ஆய்​வில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT