இந்தியா

மீண்டும் இணைந்த மோடி, ஜின்பிங், புதின்: 3 ஆண்டுகளில் 3-வது சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 18-வது உச்சி மாநாடு டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் நேற்று தொடங்​கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று எடுத்​துக்​கொண்ட சில புகைப்​படங்​களை சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​தார்.

அதில், சீன அதிபர் ஜி ஜின்​பிங் மற்​றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி கைகோர்த்​த​படி இருக்​கும் புகைப்​பட​மும் இடம்​பெற்​றுள்​ளது. கடந்த 3 ஆண்​டு​களில் இந்த மூன்று தலை​வர்​களும் நடத்​தும் 3-வது சந்​திப்பு இது​வாகும்.

இந்த மாநாட்​டில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான், தென்​னாப்​பிரிக்க அதிபர் சிரில் ரமபோ​சா, மலேசிய பிரதமர் அன்​வார் இப்​ராகிம், இந்​தோ​னேசிய அதிபர் பிர​போவோ சுபி​யாந்​தோ, அபு​தாபி பட்​டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்​யான், எத்​தி​யோப்​பிய பிரதமர் அபி அகமது அலி, எகிப்து அதிபர் அப்​தெல் ஃபத்தா எல்​-சிசி மற்​றும் வியட்​நாம் பிரதமர் லே மின் ஹங் உள்​ளிட்ட தலை​வர்​களும் பங்​கேற்​றுள்​ளனர்.

ஐ.நா. பொதுச் செய​லா​ளர் பங்கேற்பு

ஐ.நா. பொதுச் செய​லா​ளர் அந்தோனியோ குத்​தேரஸ், உலக வர்த்தக அமைப்​பின் தலைமை இயக்​குநர் என்​கோசி ஒகோன்​ஜோ-இவேலா, உலக சுகா​தார அமைப்​பின் தலைமை இயக்​குநர் டெட்​ரோஸ் அதானோம் கேப்​ரியேசஸ், புதிய வளர்ச்சி வங்​கி​யின் தலை​வர் தில்மா ரூசெஃப் மற்​றும் ஆசிய உள்​கட்​டமைப்பு முதலீட்டு வங்​கி​யின் தலை​வர் சோ ஜியாயி ஆகியோ​ரும் மாநாட்​டில் பங்​கேற்​றுள்​ளனர்.

உலகப் பொருளா​தா​ரம் பல்​வேறு சவால்​களை எதிர்​கொண்​டுள்ள நிலை​யில், இந்த மாநாடு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது. குறிப்​பாக, ரஷ்​யா-உக்​ரைன் போர், மேற்கு ஆசிய நெருக்​கடி, ஹார்​முஸ் நீரிணை முற்​றுகை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தின் வர்த்​தகம் மற்​றும் இறக்​குமதி வரிக் கொள்​கைகள் ஆகிய​வற்​றின் தாக்​கங்​களுக்கு மத்​தி​யில்​ இந்​த மா​நாடு நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT