புதுடெல்லி: 2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த பட்ஜெட் எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பொருளாதார அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாட உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.