இந்தியா

எதிரிநாட்டு டேங்க்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எ​திரி​நாட்டு டேங்க்​கு​களை அழிப்​ப​தற்​காக உரு​வாக்​கப்​பட்ட ஏவு​கணையை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம் (டிஆர்​டிஓ) நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்​தது.

எதிரி​நாட்டு டேங்க்​கு​கள் மற்​றும் கவச வாக​னங்​களை தாக்கி அழிக்க இலகு ரக ஏவு​கணை ஒன்றை டிஆர்​டிஓ உரு​வாக்​கியது. இதை தோளில் சுமந்து செல்​லும் லாஞ்​சர் மூலம் ஏவ முடி​யும். மூன்றாம் தலை​முறை ஏவு​கணை​யான இதற்கு எம்​பிஏடிஜிஎம் என பெயரிடப்​பட்​டுள்​ளது. இதற்கு சுமந்து செல்​லக்​கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவு​கணை என பொருள்.

இந்த ஏவு​கணையை தோளில் சுமந்து செல்​லும் லாஞ்​சர் மூலம் ஏவும் போது, இது வானில் உயர​மாக சென்று பின் செங்​குத்​தாக கீழ் இறங்கி நகர்ந்து செல்​லும் இலக்கை தாக்​கும். இந்த ஏவுகணை​யில் உள்ள அனைத்து அம்​சங்​களும் உள்​நாட்டு தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி டிஆர்​டிஓ அமைப்​பின் துணை நிறு​வனங்​கள் உரு​வாக்​கின.

இந்த ஏவு​கணை மகா​ராஷ்டிரா மாநிலத்​தின் அகில்யா நகரில் உள்ள பாலைவன பரிசோதனை மையத்​தில் நேற்று சோதித்து பார்க்​கப்​பட்​டது. 14.5 கிலோ எடை​யுள்ள லாஞ்​சரை ஒரு​வர் தோளில் சுமந்து சென்​று, மற்​றொரு​வரின் உதவி​யுடன் இலகுரக ஏவு​கணையை ஏவி​னார்.

லாஞ்​சரில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவு​கணை வானில் உயரே சென்று பின் கீழ் இறங்கி இலக்கை துல்​லிய​மாக தாக்​கியது. இந்​த சோதனையை டிஆர்​டிஓ வெற்​றிகர​மாக முடித்​தது.

SCROLL FOR NEXT