இந்தியா

வெறிநாய்க் கடி தடுப்பூசியை தவிர்த்த மும்பை சிறுமி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: ​மும்​பை​யைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி சகானியை சுமார் 6 மாதங்​களுக்கு முன்பு ஒரு தெரு​நாய் கடித்​தது. இதையடுத்து தடுப்​பூசி போடு​வதற்​காக மருத்​து​வ​மனைக்கு சகானி அழைத்​துச் செல்​லப்​பட்​டார்.

ஆனால் ஊசிக்கு பயந்த அச்​சிறுமி, தடுப்​பூசி போட்டுக் கொள்ள மறுத்​து​விட்​டாள். சில நாட்​களில் அச்​சிறுமி குணமடைந்​தார். இந்நிலை​யில் சில நாட்​களுக்கு முன்பு சிறுமி​யின் உடல் ​நிலை மோசமடைந்​தது. இதையடுத்து சிறுமியை மும்​பை​யில் உள்ள ஒரு மருத்​து​வ​மனையில் சேர்த்தனர். நேற்று முன்​தினம் அச்​சிறுமி உயி​ரிழந்​தாள்.

          
SCROLL FOR NEXT