இந்தியா

நேபாள பெருவெள்ளம்: அமைச்சர் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை

செய்திப்பிரிவு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை மற்றும் நலன் குறித்து அறிந்து கொள்ள இந்தியா அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளியுறவுச் செயலாளர், வெளியுறவு அமைச்சக குழுவினர் மற்றும் காத்மாண்டு, பெய்ஜிங் ஆகிய இடங்களில் உள்ள எங்கள் தூதர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன்.

இந்த விவகாரத்திலும் நிவாரண நடவடிக்கைகளிலும் நேபாள அரசுத் தரப்புடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் 3 உடல் மீட்பு: நே​பாள வெள்ளத்​தால் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் எல்லைதாண்டி இந்​தியா வந்​துள்​ளன. உத்​தரப் பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்​தில் காண்​டக் நதி​யில் இருந்​து, 2 பெண்கள் உட்பட 3 சடலங்​களை பாதுகாப்பு படை வீரர்​கள் மீட்டனர்​.

SCROLL FOR NEXT