இந்தியா

ரஷ்ய அதிபர் புதினுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்

செய்திப்பிரிவு

மாஸ்கோ: இந்​திய, ரஷ்ய வர்த்​தக, பொருளா​தார அறி​வியல், தொழில்​நுட்ப, கலாச்​சார கூட்​டமைப்​பின் 27-வது மாநாடு மாஸ்​கோ​வில் கடந்த 23, 24-ம் தேதி​களில் நடை​பெற்​றது. இதில் இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்கர் பங்​கேற்​றார். இந்த மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறும்​போது, “இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான பொருளா​தார ஒத்​துழைப்பு அதி​கரித்து வரு​கிறது. வர்த்​தகம், எரிசக்​தி, உரங்​கள், அணு சக்தி துறை​களில் இரு நாடுகள் இடையி​லான உறவு வலு​வடைந்து வரு​கிறது. டெல்​லி​யில் நடை​பெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யின் சார்​பில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுக்​கிறேன்” என்று தெரி​வித்​தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்​போது, “பல்​வேறு துறைகளில் இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் இணைந்து செயல்படுகின்றன. இந்​திய விவ​சா​யிகளுக்கு தேவை​யான உரங்களை தொடர்ந்து விநி​யோகம் செய்​வோம். இரு நாடு​கள் இடையி​லான வர்த்​தகத்தை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்​திய பிரதமர் நரேந்​திர மோடியை சந்​திக்க மிகுந்த ஆவலுடன் காத்​திருக்​கிறேன்” என்று தெரி​வித்​தார்.

பின்​னர் ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் கூறும்​போது, “ரஷ்​யா​வின் மிக நெருங்​கிய நட்பு நாடு இந்​தி​யா. வரும் செப்​டம்​பரில் டெல்​லி​யில் நடை​பெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் ரஷ்ய அதிபர் புதின் பங்​கேற்​பார்” என்று தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT