இந்தியா

திருப்பதியில் தேசியக்கொடி ஏற்றியபோது மயங்கிய அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி

என். மகேஷ்குமார்

திருப்பதி: ஆந்​திர மாநிலம் திருப்​ப​தி​யில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்​தில், நாட்​டின் 80-வது சுதந்​திர தின விழா நேற்று வெகு விமரிசை​யாக நடை​பெற்​றது.

இதில் முக்​கிய விருந்​தின​ராக கலந்து கொண்ட மாநில இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண ரெட்டி, தேசிய கொடியை ஏற்றி வைத்​தார்.

பின்​னர் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றுக் கொண்​டார். அதன் பின்​னர் அமைச்​சருக்கு லேசான மயக்​கம் வந்து கீழே விழப்​போ​னார். உடனே அவரது மெய்க்​காப்​பாளர்​கள் தாங்​கிப் பிடித்து உட்​கார வைத்​தனர். பின்​னர், அங்​கிருந்த மருத்​து​வர்​கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்​தனர்.

சிறிது நேர ஓய்​வுக்​குப் பின்​னர், வழக்​கம்​போல் சுதந்​திர தின விழா​வில் பங்​கேற்ற அமைச்​சர், 11,649 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,181 கோடிக்கான காசோலையை வழங்​கினார்.

மேலும், பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியரின் கலை நிகழ்ச்​சிகள், மோப்ப நாய்​களின் சாகசங்​களைக் கண்டு ரசித்​தார். பின்​னர், தியாகி​களுக்கு பொன்​னாடை போர்த்தி கவுர​வித்​தார். உத்தம அரசு ஊழியர்​களுக்கு பாராட்டு சான்​றிதழ்​களை​யும் வழங்​கி​னார். இதில், திருப்​பதி ஆட்சி​யர் வெங்​கடேஸ்​வர், எம்​.பி., எம்​.எல்​.ஏ.க்​கள், அரசு அதி​காரி​கள் பங்​கேற்​று சிறப்​பித்​தனர்​.

SCROLL FOR NEXT