இந்தியா

7 ரூபாய் வழிப்பறி வழக்கு 50 ஆண்டுக்கு பிறகு ரத்து

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யின் தெற்கு பகு​தி​யில் உள்ள 7 தீவு​களில் ஒன்று மசாகோன். இந்த பகு​தியை சேர்ந்த ஒரு​வரிடம் 1977-ம் ஆண்​டு, 2 மர்ம நபர்​கள் 7 ரூபாய் 65 பைசாவை பறித்​துச் சென்​றனர். பாதிக்​கப்​பட்ட நபர் உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து 2 மர்ம நபர்​களை தேடி வந்​தனர். சுமார் 50 ஆண்​டு​களாகி​யும் குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட​வில்​லை. இந்த வழக்​கின் விசா​ரணை மசாகோன் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. இந்த சூழலில் மசாகோன் நீதி​மன்​றத்​தில் அண்​மை​யில் வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மாஜிஸ்​திரேட் ஆர்த்தி குல்​கர்னி கூறிய​தாவது: கடந்த 50 ஆண்​டு​களாக வழக்கு நீடிக்​கிறது. வழக்கை தொடுத்த புகார்​தா​ரர் உயிரோடு இருக்​கிறா​ரா? ஏழு ரூபாயை திருடிய மர்ம நபர்​கள் உயிரோடு இருக்​கிறார்​களா என்​பது போலீ​ஸாருக்கு தெரியவில்​லை. வழிப்​பறி செய்​யப்​பட்ட தொகை ரூ.2,000-க்கு குறை​வாக இருப்​ப​தால் சுருக்க விசா​ரணை மூலம் விரை​வாக வழக்கு முடிக்கப்​பட்டு இருக்க வேண்​டும். ஆனால் நீண்ட கால​மாக நிலுவையில் உள்ளது.

இது​போன்ற வழக்​கு​களால் நீதி​மன்​றத்​தின் சுமை அதி​கரிக்​கிறது. எனவே, வழக்கு ரத்து செய்​யப்​படு​கிறது. புகார் ​தா​ரர் உயிரோடு இருந்​தால் அரசு தரப்​பில் அவருக்கு ரூ.7.65-ஐ வழங்க வேண்​டும். இவ்​வாறு மாஜிஸ்​திரேட் ஆர்த்தி உத்​தர​விட்​டார்.

வழக்கு குறித்து சட்ட நிபுணர்​கள் கூறிய​தாவது: இன்​றைய காலத்தில் 7.65 ரூபாய் என்​பது மிக​வும் சொற்ப தொகை​. ஆனால் கடந்த 1977-ம் ஆண்​டில் இந்த தொகை​யின் மதிப்பு அதி​கம். அப்​போது ஒரு நபர் சராசரி​யாக ரூ.200 மட்​டுமே ஊதி​யம் பெற்​றார். ஒரு நாளிதழின் விலை 40 பைசா​வாக இருந்​தது. ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ.1 ஆக இருந்​தது.

இதன் ​காரண​மாக 7.65 ரூபாயை பறி​கொடுத்த நபர் போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸாரின் அலட்​சி​யம், கவனக்​குறை​வால் சுமார் 50 ஆண்​டு​கள் வரை வழக்கு நீடித்திருக்கிறது. இவ்​வாறு சட்​ட நிபுணர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT